முன்னனி நடிகர்கள் காணாமல் போன போது கொரோனா பாதிப்பிற்காக நிதியுதவி அளித்த எஸ் கே.

By Rajkumar · 31/3/2020

ஒட்டுமொத்த உலகமும் இந்த கொரோனா வைரஸினால் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய உலகமே போராடி வருகிறது. கொரோனா வைரசினால் உலகம் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் பரவல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 1251 பேர் பாதிக்கப்பட்டும், 32 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள்.

https://www.youtube.com/watch?v=R8rvEp4Z-W4

மக்கள் அனைவரும் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். கொரோனாவினால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : தாய் மற்றும் பாட்டியுடன் தனுஷ் எடுத்த செல்ஃபி. வைரலாகும் புகைப்படம்..

இதற்காக சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள். இந்திய திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் தமிழக அரசிற்கு 25 லட்சம் ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளார்.

மேலும், இவர் இதற்கு முன்னரே சிவகார்த்திகேயன் FEFSI யில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்து இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது. சிவகார்த்திகேயன் அவர்களின் இந்த பெருந்தன்மையை பாராட்டி அரசாங்கமும், மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரை போன்று நடிகர் சூர்யா,பிரகாஷ் ராஜ்,பிரபாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார்கள்.

https://twitter.com/Aiswaryaguru_SK/status/1244954828972982273

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் வீட்டில் இருக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக புத்தகம் படிப்பது, பெயிண்டிங் என ஏதாவது ஒரு விஷயத்தை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தில் கதாநாயகனாக தமிழ் திரையுலக வாழ்க்கையை துவங்கினார்.இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர்.

இதையும் பாருங்க : எப்பேய், கருணாஸ் மகனா இது ? எப்படி படு ஸ்டைலிஷா மாறிட்டாரு பாருப்பேய்.

கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. பின் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த “ஹீரோ” படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது சிவர்கார்த்திகேயன் அவர்கள் டாக்டர், அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full