தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். நடிகர் சாந்தனுவை எல்லாருக்கும் தெரியும். ஏன்னா, இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளி வந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகன் தான் சாந்தனு. பிறகு இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஆயிரம்விளக்கு, அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
அதோடு நடிகர் சாந்தனு, இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். இது பலருக்கும் தெரிந்ததே. இவர்கள் இரண்டு பேருக்கும் ஒற்றுமை உள்ளது. அதில் ஒன்று பாட்டு பாடுதல், மற்றொன்று நடனமாடுதல். நடிகர் சாந்தனு நடன திறமையை நாம் பல மேடைகளிலும், படங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பார்த்திருப்போம். இந்நிலையில் நடிகர் சாந்தனு நிகழ்ச்சி ஒன்றில் பாட்டு பாடி உள்ளார். இவர் மேடையில் பாடல் பாடி அதிர வைத்து உள்ளார். அது வேறு எங்கும் இல்லை, விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடை தான். நடிகர் சாந்தனு சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்று உள்ளார். அப்போது மேடையில் பாட்டு பாடி உள்ளார். இது பலரையும் கவர்ந்து உள்ளது.
இதையும் பாருங்க : ஹீரோ படத்தில் நடித்தவரை ஏற்கனவே ஒரு படத்தில் பாத்த மாதிரி இருந்துச்சில. அது இந்த படம் தான்.
இவர் பாடிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிவா அவர்கள் கூறியது, நீ நல்லா பாடுற மச்சான். ஆனால், நீ நடனம் ஆடின எந்த நேரத்திலும் எனக்கு கால் செய்யலாம் என கூறியுள்ளார். நடிகர் சிவாவின் நடனம் எல்லாருக்குமே தெரியும். சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். மேலும், சாந்தனு சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் தான் தளபதி விஜய்யின் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்து வரும் படம் மாஸ்டர்.
இந்த படத்தில் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். நடிகர் சாந்தனு இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்டை பட புகழ் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சஞ்சீவ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து உள்ளார்கள்.