சிவாஜி குடும்பத்தின் சொத்து பிரச்சனை – முறிந்துபோன அந்த திருமணப் பந்தம்தான் இவ்ளோ பிரச்னைக்கும் காரணமா?

0
1335
prabu
- Advertisement -

சிவாஜி கணேசனின் குடும்ப சொத்து விவகாரத்திற்கு காரணம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. இவர் விழுப்புரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி. இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார். பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் சிவாஜி என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும்.

- Advertisement -

இவருடைய மகன் பிரபு. இவர் தன் தந்தையைப் போல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரை தொடர்ந்து இவருடைய மகன் விக்ரம் பிரபு. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் சினிமாவில் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்கள் தொடர்பாக அவருடைய சகோதரிகள் தொடர்ந்து இருக்கும் வழக்கு சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

சிவாஜி கணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்து வாங்கி இருந்தார். அதனுடைய இன்றைய மதிப்பு 271 ஒரு கோடி ஆகும். சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி என்று நான்கு பிள்ளைகள். சிவாஜி மறைவுக்குப் பின்பு அவருடைய வாரிசுகள் சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு தெரியாமல் சில சொத்துகளை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் தேன்மொழி ஆகியோர் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இது சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக சிவாஜி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியிருந்தது, சிவாஜி குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரே குடும்பத்திலிருந்து பெண் அல்லது மாப்பிள்ளை எடுக்கிற பழக்கம் இருந்தது. அதாவது சிவாஜியின் மனைவியும், அவருடைய தம்பி சண்முகத்தின் மனைவியும் அக்கா தங்கைகள். அதேபோல சிவாஜி மகள்கள் இரண்டு பேருமே அண்ணன் தம்பிகளை கல்யாணம் செய்துகொண்டார்கள். சிவாஜி உயிருடன் இருந்தவரை உறவுகளுக்குள் சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும் எல்லோரையும் அரவணைத்து வைத்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் அவரது சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டு இருந்தார்கள்.

சிவாஜியின் மறைவுக்கு பிறகு சில ஆண்டுகள் இந்த குடும்பம் பிரச்சினையை வெளிக்காட்டாமல் அவர்களுக்குள்ளேயே முனகிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், சிவாஜியின் இரண்டு மகள்களும் பிறந்த வீட்டின் பந்தத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி சென்றார்கள். ஆனால், சிவாஜியின் தம்பி மறைந்த சண்முகத்தின் குடும்பமும் ராம்குமார், பிரபு குடும்பத்துடன் சேர்ந்து இன்னைக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். சிவாஜியின் சில சொத்துக்களை விற்று சில சொத்துக்களை மாற்றியது போன்ற நிகழ்வுகளால் தான் இந்த பிரச்சனை ஆரம்பமானது. சிவாஜி தன்னுடைய மகள்களுக்கு நிறைய நகைகளை போட்டு திருமணம் நடத்தி இருந்தாலும் அவர் சம்பாதித்த சொத்தை கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்து கொண்டுதான் இருந்தது.

அதுமட்டுமில்லாமல் தங்களுடைய சித்தப்பா குடும்பத்தினர் மீதும் வெறுப்பு காண்பிக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும் பிரபு சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக தன்னுடைய மகளை தன்னுடைய சகோதரியின் மகனுக்கு கட்டிக் கொடுத்தார். ஆனால், இருவருமே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார்கள். இந்த விவாகரத்து பிரச்சனை தான் சொத்து தகராறுக்கு ஆணிவேராக அமைந்தது. உடனே சாந்தி, தேன்மொழி இருவருமே ராம்குமார்- பிரபு மீது வழக்கு தொடர்ந்தார்கள். பிரபு தன்னுடைய தந்தையைப் போல் குடும்பத்தை கட்டுக்கோப்பாக கொண்டு வருவாரா? இல்லை சிதர விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement