சிவாஜி கணேசன், நாகேஷ் இடையே நடந்த சலசலப்பு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவருடைய நடிப்பு மூலம் தான் சினிமாவில் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. காலம் கடந்தாலும் நாகேஷின் நகைச்சுவையும், ஞாபகங்களும் என்றும் மக்கள் மனதை விட்டு நீங்காது.
தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை மற்றும் உடல் மொழியின் மூலம் மக்களை தன்வசம் செய்தவர் நாகேஷ். பல போராட்டத்திற்கு பிறகு தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நாகேஷுக்கும், சிவாஜி கணேசனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மனக்கசப்பு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
திருவிளையாடல் படம்:
அதாவது, கடந்த 1965 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சாவித்திரி நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘திருவிளையாடல்’. இந்த படத்தில் தருமி என்ற வேடத்தில் நாகேஷ் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்தபோது நாகேஷ் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இதனால் இந்த படத்திற்காக ஒரு ஒன்றரை நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் நாகேஷ்.
நாகேஷ் புலம்ப காரணம்:
அதோடு இயக்குனர், நாகேஷ் தனியாக வரும் காட்சிகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டார். அதிலும் குறுக்கும் மறுக்கும் ஆக நடந்து கொண்டு நாகேஷ், அவன் வர மாட்டான். எனக்கு பரிசு கிடைக்காது என்று புலம்பியபடி நடித்திருப்பார். அந்த காட்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு தான் வருகிறது. இந்த காட்சி வந்ததற்கு காரணமே சிவாஜி கணேசன் தான். இந்த காட்சியை எடுக்கும்போது சிவாஜி மேக்கப் போட்டு வர தாமதமானது.
சிவாஜி பாராட்டு:
அப்போதுதான் நாகேஷ் இந்த காட்சியில் நடித்தார். அவருடைய நடிப்பு திறமையை பார்த்தே பலருமே பாராட்டினார்கள். சொல்லப்போனால், சிவாஜி கணேசன், நாகேஷ் தனியாக வரும் காட்சியில் பிரமாதமாக நடித்து இருப்பதை பார்த்து பாராட்டி இருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த காட்சியில் இருவருடைய நடிப்பும் இன்றும் சோசியல் மீடியாவில் மீம் மெட்டீரியல் ஆகவும், 2கே கிட்ஸ் மத்தியில் வரவேற்கப்பட்டும் இருக்கிறது.
சிவாஜி கணேசன் குறித்த தகவல்:
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார். பின் 1952ல் ‘பராசக்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்து இருந்தார். சிவாஜி என்பது நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.