சாய் பல்லவியுடன் அதை எப்படி சமாளிப்பீர்கள் – தொகுப்பாளனி கேட்ட கேள்வியால் கடுப்பான Sk ரசிகர்கள்.

0
156
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குனர் இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் எதையாவது சாதிக்க வேண்டும் முயற்சியில் இருக்கிறார். அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் ஆசிரியராக இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? சாதித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

இதையும் பாருங்க : எங்க மூனு பேருக்குமே அப்பா இல்லை – டான் படத்தில் அம்மாவாக நடித்த நடிகை உருக்கம்.

- Advertisement -

டான் படம்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவிக்குமார் தான் அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:

இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான புகைப்படம் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனிடம் பேட்டி எடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

சாய் பல்லவி குறித்து சிவா சொன்னது:

அதில் அவரிடம் தொகுப்பாளர், இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்கும் போகிறார். அவருடன் வளைந்து நெளிந்து நடனமாடுவது பற்றி யோசித்துப் பார்த்திருக்கலா? என்று கேட்டதற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியிருந்தது, கஷ்டம் தான் பார்க்கலாம். இந்த படம் முழுக்க முழுக்க இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி தான் காரணம். அவர் கதை சொல்லித்தான் கமல் சாருக்கு இந்த படம் பிடித்துக் கொண்டது. பின் சோனி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இது தான் தமிழில் அவர்கள் தயாரிக்கும் முதல் படம். எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

ரசிகர்கள் கமெண்ட் :

இந்த படத்தில் நிறைய விஷயங்கள் சேலஞ்சாக இருக்கு. அதில் ஒன்று தான் சாய்பல்லவி உடன் நடனம் ஆடுவது என்று கூறி இருந்தார். இப்படி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பீட்டர் அக்காவுக்கு நம்மள பத்தி தெரியல என்று பதிவிட்டு டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடனம் ஆடிய வீடியோவை பதிவிட்டிருக்கிறார்கள். மேலும், தொடர்ந்து பலரும், சிவகார்த்திகேயன் உடைய டான்ஸை பற்றி பலருக்கும் தெரியவில்லை. அவர் சூப்பர் டான்சர். பல்லவி வளைஞ்சி நெளிஞ்சி ஆடுவாங்க, தலைவன் வெறித்தனமாக ஆடுவார் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement