‘அரபிக் குத்து என்னோடதில்லை, நான் இது மட்டும் தான் பண்ணேன்’ – புதிய குண்டு போட்ட சிவகார்த்திகேயன்

0
297
arabic
- Advertisement -

பீஸ்ட் படத்தில் வெளிவந்திருந்த ‘அரபி குத்து பாடல் என்னோடது இல்லை’ என்று சிவகார்த்திகேயன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படம் பேன் இந்திய படமாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பீஸ்ட் பட கதை:

படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜய் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று சிலர் கூறி இருக்கிறார்கள். மேலும், பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அரபிக்குத்து பாடல் ரிலீஸ்:

முதல் நாள் வசூலில் முந்தைய படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் அரபிகுத்து பாடல் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

அரபிக்குத்து பாடல் குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த பாடல் யூடியூபில் 195 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களைக் கடந்து மாஸ் காட்டி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இன்ஸ்டா ஸ்டோரில் இந்தப் பாடல் தான் பட்டி தொட்டி எங்கும் பரவி இருக்கிறது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இது குறித்து பலரும் சிவகார்த்திகேயனை பாராட்டி இருந்தனர்.

அரபிக்குத்து பாடல் குறித்து சிவகார்த்திகேயன் சொன்னது :

இந்த நிலையில் இந்தப் பாடல் அனிருத் பாடல் என்று சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். அதாவது இதுகுறித்து பேட்டியில் சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, அரபி வார்த்தைகளை எல்லாம் சேர்த்து ஃபுல்லா பாட்டு எனக்கு அனிரூத் அனுப்பியிருந்தார். அதைக்கேட்டு சில வார்த்தைகளை மட்டும் நீக்கி தமிழ் வார்த்தைகள் சிலவற்றை சேர்த்திருந்தேன் என்று உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Advertisement