விரைவில் வெளியாகவுள்ள சிவகார்திகேயனின் mr.லோக்கல் இந்த ரஜினி படத்தின் காப்பியா.!

0
675
- Advertisement -

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ராஜேஷ் குமார் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
‘மிஸ்டர் லோக்கல்’ படம்ரஜினிகாந்தின் ‘மன்னன்’ பட ரீமேக்கா?சிவகார்த்திகேயன் விளக்கம்

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் கூறுகையில் ‘‘நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குறும்புத்தனமான இளைஞனுக்கும் ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கும் இடையிலான மோதலும் காதலும்தான் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை.

இதையும் படியுங்க : அஜித்தோட பாட்டின் அர்த்தம் இப்போதான் புரியுது.! மீண்டும் ரசிகர்களை காண்டாக்கிய கஸ்தூரி.! 

- Advertisement -

மது அருந்தும் காட்சி, பெண்களை கேலி செய்யும் வரிகள் உள்ள பாடல்கள் படத்தில் இல்லை. இந்த படம் ரஜினிகாந்தின் மன்னன் படத்தின் ரீமேக் என்று பேசுகிறார்கள். மன்னன் ரீமேக் இல்லை. ஆனாலும் அந்த படத்தில் இருந்த நாயகன், நாயகி மோதல் மிஸ்டர் லோக்கல் படத்தில் இருக்கும்.

இது முழுக்க நகைச்சுவை படம். நயன்தாரா என்னை விட சிறந்த நடிகை. வேலைக்காரன் படத்தில் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்ற மனக்குறை இந்த படத்தில் தீர்ந்தது. அவர் நடிப்புக்கு தீனிபோட்டுள்ள படம். தொடர்ந்து வித்யாசமான கதைக்களத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் விஜய் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற தகவல்கள் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement