உங்க கிட்ட ரஜினி சாயல் இருக்குன்னு சொன்னீங்க, ஆனா, விஜய் சாயல் இருக்கிற மாதிரி தெரியுதே? – பத்திரிக்கையாளர் கேள்விக்கு skவின் பதில்.

0
213
sk
- Advertisement -

சமீபத்தில் தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

-விளம்பரம்-

ஆனால், இறுதியாக இவரது நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. ஆனால், அதற்கு முன்பாக இவரது நடிப்பில் வெளியான டான்,டாக்டர் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. பொதுவாக சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் ரஜினி ஸ்டைலை இமிடெட் செய்வதாக ஒரு விமர்சனம் இருந்து கொண்டு தான் வருகிறது. அதே போல இவர் விஜய் போலவும் நடந்து கொள்கிறார் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது இப்படி ஒரு நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயனே விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16, 1947. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகியாக ரேவதி நடித்துள்ளார். 1947 திரைப்படம் நம் சுதந்திரத்தை தழுவி எடுக்கப்பட்ட கதை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார்.

இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் சாரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் ஏழாம் அறிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பின்னால் இருந்து பணியாற்றினேன். இதையடுத்து அவர் தயாரித்த எங்கேயும் எப்போதும் பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினேன். பின்னர் அவரது தயாரிப்பில் மான் கராத்தே படத்தில் நடித்தேன். தற்போது அவர் தயாரிக்கும் படத்தின் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த விழாவை முடித்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் சிவகார்த்திகேயன். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ‘ரஜினி சாயல்னு சொன்னீங்க, ஆனா விஜய் சாயல் இருக்கிற மாதிரி தெரியுதே?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் ‘ எனக்கு தெரியாத வேறு சில நடிகைகளின் சாயல் கூட என்னிடம் இருக்கலாம் ஆனால் நான் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் மேடைகளில் ரஜினி சார் போல மிமிக்கிரி செய்திருக்கிறேன்.

அதனால் எப்போதும் இப்படி ஒரு விஷயம் என் மீது இருந்து கொண்டே இருக்கும் இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று நான் திட்டம் போட்டு செய்வதை எல்லாம் கிடையாது அது தானாகவே எனக்கு இருக்கிறது அதில் எனக்கு சந்தோஷமும் கூட’ என்று கூறியுள்ளார். மேலும் மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும், இந்த ஆண்டு நிச்சயம் படம் வெளியாகிவிடும். இதனை தொடர்ந்து கமல் சார் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பணிகள் துவங்கும்’ என்றும் கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Advertisement