சிவகார்த்திகேயன் – கெளதம் மேனன் படத்தை உறுதி செய்த தயாரிப்பாளரின் மகள் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு.

0
1607
gvm
- Advertisement -

தமிழ் திரை உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் வேற லெவல் ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தார். பிறகு இவர் மின்னலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அவதாரம் எடுத்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் பாருங்க :ரு நாளைக்கு 5 முறை தொழுகுரீங்களா ? கேள்வி கேட்ட நபருக்கு பரீனா கொடுத்த நச் பதில்.

- Advertisement -

தற்போது இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’, ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களையும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் மற்றும் கவுதம் மேனன் இணையும் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் அவர்களின் மகள் ப்ரீத்தா கணேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் மேலும், இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement