சிவகார்த்திகேயன் படத்தில் பாடும் சூப்பர் சிங்கர் போட்டியாளர்..! செந்தில் இல்லையாம்..! அதிகாரப்பூர்வ தகவல்.!

0
411
Sivakarthikeyan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு பாடகர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற செந்தில் கூட இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள “சீமராஜா ” படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளாராம். இந்நிலையில் சூப்பர் சிங்கர் 4ன் வெற்றியாளர் திவாகரம் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

seemaraja

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.மேலும் படத்தை அடுத்து ‘நேற்று இன்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சீமராஜா படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சூப்பர் சிங்கர் சீசன் 4ல் வெற்றி பெற்ற “திவாகர்”ஒரு பாடலை பாடியுள்ளாரார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் இமான் பதிவிட்டுள்ளார்.

Diwakar_(singer)_-_Dhivagar_Santhosh

இசையமைப்பாளரான இமான் பல்வேறு இளம் பாடகர்களுக்கு சினிமாவில் பாடல் பாடும் வாய்ப்பளித்து வருகிறார். குறிப்பாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்களுக்கு தனது இசையமைப்பில் பாடும் வாய்ப்பினை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.