சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க நான் ரெடி..? சொன்னது தெரியுமா.? இவரா..?

0
1365

நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுப்பாளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சின்னத்திரையில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

sivakarthikeyan

- Advertisement -

தொடக்கத்தில் காமெடி கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்து வந்த சிவகார்த்திகேயன், பின்னர் படிப்படியாக ஹீரோவாக தன்னை நிலை நாட்டிக் கொண்டார். இவர் கடைசியாக நடித்த ‘வேலைக்காரன்’ படமும் இவருக்கு நல்ல நடிகர் என்று அந்தஸ்தை ஏற்படுத்தி தந்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் நடிகர் விக்ரமுடன் உண்டான ஸ்வாரசியமான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரமும், சிவகார்த்திகேயனும் ஒரு நல்ல நட்பு ரீதியில் உள்ளவர்கள் தான். அதற்கு சான்றாக நடிகர் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ருள்ளார். அதே போல சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரமும் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vikram

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விக்ரம் தன்னுடன் வில்லனாக நடிக்க தயார் என்று நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவித்த சிவகார்த்திகேயன் விக்ரம் வேதா போன்று ஒரு மாஸ் கதையாக அமைந்தால் நாங்கள் இருவரும் ஹீரோ மற்றும் வில்லனாக சேர்ந்த நடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.