சிவகார்த்திகேயனின் 3வது மகனுக்கு நடந்த பெயர் சூட்டும் விழா- குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா? வைரலாகும் வீடியோ

0
301
- Advertisement -

தன்னுடைய மூன்றாவது குழந்தைக்கு சிவகார்த்திகேயன் பெயர் சூட்டும் விழா நடத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் தனது உறவினர் பெண்ணான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். பின் சமீபத்தில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், கடந்த ஜூன் 2ஆம் தேதி அவருக்கு மகன் பிறந்து இருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், ‘ எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெவித்துக்கொள்கிறோம்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் மகன் பெயர் சூட்டும் விழா:

ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்’ என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை சிவகார்த்திகேயன் எளிமையாக வீட்டிலேயே நடத்தியிருக்கிறார். அதில் அவர் தன்னுடைய மகனுக்கு ‘பவன்’ என்று பெயர் வைத்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

மேலும், கடைசியாக ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘அயலான்’ படத்தில் சிவா நடித்து இருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஏலியன் ஜானரில் உருவாக்கப்பட்ட இந்த படம் பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

-விளம்பரம்-

‘அமரன்’ படம்:

தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தினுடைய டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படை பற்றிய வசனங்களும், தீவிரவாதிகளுடன் சண்டை காட்சிகளும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

சிவா நடிக்கும் படங்கள்:

சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் கறி விருந்து அளித்திருந்தார். அந்த வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தின் உதவி இயக்குனர்கள் அனைவருக்குமே ஃபாசில் நிறுவன வாட்சை சிவகார்த்திகேயன் பரிசளித்திருந்தார். தற்போது இந்த படத்தினுடைய போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து சில படங்களில் சிவா கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement