யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்ல, அருண் விஜய்யின் பதிவை தற்போது கலாய்க்கும் Sk ரசிகர்கள். வைரலாகும் வீடியோ.

0
874
sk
- Advertisement -

தன்னுடைய கடின உழைப்பினாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினாலும் போராடி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் படங்களில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டாக்டர்.

-விளம்பரம்-

நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. அதோடு இந்த டாக்டர் படம் கோடிகளில் வசூலை குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். இப்படி சினிமாவில் சிவா உச்சத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் நுழைய பல போராட்டங்களையும் அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறார்.

- Advertisement -

சிவகார்த்திகேயனை விமர்சித்த அருண்விஜய்:

இவரைப் பற்றி விமர்சனம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இதுகுறித்து கூட ரெமோ படத்தின் விழாவின் போது கூட சிவகார்த்திகேயன் அழுதுகொண்டு சொல்லி இருந்தார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் வெளியான போது நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கொந்தளித்து அருண் விஜய்யை தாக்கி கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

வெளுத்து வாங்கிய ரசிகர்கள்:

அதிலும் அருண் விஜய்யை கிண்டல் கேலி செய்யும் விதமாக மீம்ஸ்,ட்ரோல்ஸ் எல்லாம் போட்டு இருந்தார்கள்.
பின் இதைத் தொடர்ந்து அருண்விஜய் இன்னொரு கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார். அது என்னவென்றால், என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது. சற்று முன்பு தான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். சினிமாவில் இத்தனை வருடங்களாக இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவர். நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, படுத்த நினைத்ததும் கிடையாது.

-விளம்பரம்-

மன்னிப்பு கேட்டு பதிவு போட்ட அருண் விஜய்:

நடிகர்களுக்கு இடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டு இருந்தார். மேலும், இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. யாரைப் பார்த்தும் பயப்படுவதில்லை. எனது அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் என்று பேசியிருந்தார். இருந்தாலும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அருண் விஜய்யை வறுத்து எடுத்து தான் வந்தார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திரைப்பட தயாரிப்பாளர் அன்புசெழியன் மகளுக்கு திருமணம் நடைபெற்றது.

அருண் விஜயை பின்னுக்கு தள்ளிய ரசிகர்கள்:

இந்த திருமண விழாவில் பிரபல நடிகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது இந்த திருமண விழாவிற்கு அருண்விஜய், சிவகார்த்திகேயன் வந்திருந்தார்கள். சிவகார்த்திகேயன் வந்த உடனே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ரசிகர்கள் எல்லோரும் சிவகார்த்திகேயன் இடம் ஃபோட்டோ எடுக்க ஆரம்பித்தார்கள். அப்போது அருண் விஜய்யை பின்னுக்கு தள்ளி சிவகார்த்திகேயனை பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது தான் எங்களுடைய வளர்ச்சி என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement