சிவகார்த்திகேயனின் இந்த முடிவால், தயாரிப்பாளர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றுள்ளனர்.

0
3161
siva karthikeyan hd

சமீப காலமாக தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் பிரச்சனை அதிகமாகி உள்ளது. சொல்லப்போனால் கடந்த 15 வருடங்களாக பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக சிரம்பப்பட்டு வருகின்றனர். அதன் உச்சமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சசிக்குமாரின் உறவினர் மற்றும் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

Fahad-and-Siva

- Advertisement -

இதன் பிறகு தற்போது தயாரிப்பாளர்களுக்கு உதவ நடிகர்களும் முன் வந்துள்ளனர். அதே போன்று நடிகர் சிவாகார்த்திகேயனும் வேலைக்காரன் திரைப்பட தயாரிப்பாளருக்கு உதவி செய்துள்ளார். அசோக் குமார் தற்கொலை சிவாகார்த்திகேயனை சற்று அதிகமாக பாதித்ததால் தயாரிப்பாளர்களும் நலமாக இருக்க வேண்டும் என சில நற்செயல்களை செய்துள்ளார் சிவா.

-விளம்பரம்-

அசோக் குமார் தற்கொலை செய்தியை கேள்விப்பட்ட சிவா, உடனடியாக தனது தயாரிப்பாளர்களை அழைத்து காசோலையை அவர்களது பட்ஜெட்டில் வைக்கும்படி கூறியுள்ளார்.

பொதுவாக படம் எடுத்து முடிந்த பின்னர் மொத்தமாக முழு சம்பளத்தையும் பெற்றுக்கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் சிவா சிறிது அட்வான்ஸ் தொகையை மட்டுமே முன்பனாக பெற்று கொண்டு, மற்றவையை நடித்து முடித்தபின் பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாகும் பட்சத்தில் தனது சம்பளத்தை குறைத்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

வளர்ந்து வரும் நடிகரான சிவா கார்திகேயனனின் இந்த செயல் மிகவும் வரவேற்கத்தக்கதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

Advertisement