சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா செய்த மிகப்பெரிய சாதனை..! குவியும் வாழ்த்து.!

0
1138

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்களின் குழந்தைகைகள் சினிமாவில் கால் பதித்து வருகின்றனர். விஜய் மற்றும் ஜெயம் ரவி போன்றவர்களின் குழந்தைகள் சினிமாவில் முகம் காண்பித்துவிட்ட நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் ‘கனா’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகியுளளார்.

SivakarthikeyanSivakarthikeyan
Sivakarthikeyan

இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற்றது. மேலும், இந்த படத்தில் தனது மகள் ஆராதனாவை பாடகியாக அறிமுகம் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள ‘ என்ற பாடலை தனது மழலை மொழயில் தனது தந்தையுடன் சேர்ந்து அற்புதமாக பாடியுள்ளார் ஆராதனா.

- Advertisement -

சமீபத்தில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் சிவகார்திகேயன் மற்றும் ஆராதனா இருவரும் பாடல் பாடும் விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், இந்த பாடல் யூடூயூப், ட்விட்டர் என அணைத்து சமூக பக்கத்திலும் வைரலாக பரவி வந்தது. தற்போது இந்த பாடல் 5 மில்லியன் வீவ்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

 

-விளம்பரம்-

Capture

தமிழ் சினிமாவில் முதன் முறையாக பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அவரது தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.மேலும், இந்த படத்தை முதன் முறையாக சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement