கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார்.கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அந்த படம் அமேசான் பிரைமில் திரைப்படம் வெளியாக இருந்தது. இந்த படம் வெளியான போது திரையரங்கில் 50 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்ததால் மாஸ்டர் போன்ற படங்கள் நேரடியாக திரையரங்கில் வெளியானது.

ஆனால், சிறிய ஹீரோக்களின் படங்கள் 50 சதவீத இருக்கையை நம்பி திரையரங்கில் வெளியிட தங்கியதால் பல்வேறு ott தளங்களுக்கு விற்றுவிட்டனர்.இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதியின் துக்லக் திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படமும் தற்போது OTT ரிலீஸ்ஸில் புதிய சிக்கல் ஒன்றை சந்தித்துள்ளது. விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படங்களை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் நேரடி ஓடிடி ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போட்டது.

இதையும் பாருங்க : தளபதி 65வில் வில்லனாகும் மாஸ்டர் மைண்ட் இயக்குனர் – பவானி எல்லாம் மாந்துடுவீங்க.

Advertisement

ஓடிடி உரிமையோடு சேட்டிலைட் உரிமையும் சேர்த்துத்தான் டிஸ்னி ஹாட்ஸ்டார் டீல் பேசியிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு படங்களின் டிவி உரிமையும் ஏற்கெனவே சன் டிவிக்கு விற்கப்பட்டுவிட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு படங்களையும் நேரடியாக OTTயில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் ஆனால், சன் நிர்வாகமோ நீங்க தேவைப்படுற நேரத்துல வந்து கொடுத்துட்டு, திரும்ப உங்களுக்குத் தேவைப்படுற நேரத்துல கேட்டா கொடுக்குறதுக்கு நாங்க என்ன பேங்க்கா நடத்துறோம். டிவி உரிமத்தை திருப்பித்தர முடியாது” என மறுத்திருக்கிறது. இதனால் இந்த இரண்டு படங்களும் OTT வெளியீட்டில் சிக்கலை சந்தித்து உள்ளது. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாவதற்கு முன்பாக இந்த இரண்டு படங்களும் சன் டிவியில் போடப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

Advertisement

Advertisement
Advertisement