தளபதி 65வில் வில்லனாகும் மாஸ்டர் மைண்ட் இயக்குனர் – பவானி எல்லாம் மறந்துடுவீங்க.

0
853
vijay65

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

இப்படி ஒரு நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 9ஆண்டுகள் இயக்குநர் கமலிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷைன் டாம் சாக்கோ 2011ஆம் ஆண்டு வெளியான ‘காடம்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஈ அடுத்த காலத்து’, ‘அன்னையும் ரசூலும்’, ‘சாப்டர்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : ரொம்ப கஷ்டப்படுறேன் உதவி செய்யுங்க – பூ, ரஜினி முருகன் பட நடிகர் ஹலோ கந்தசாமி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்த பேச்சு வார்த்தைகள் படு மும்மரமாக நடைபெற்று வருவதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை இது உண்மையானால் மாஸ்டர் படத்தில் வந்த பவானி கேரக்டரை விட தளபதி 65 வில்லன் கேரக்டர் வெறித்தனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வீடியோவில் 2 : 50 நிமிடத்தில் பார்க்கவும்

ஏற்கனவே செல்வார்கவன் சாணிக் காகிதம் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கி இருக்கிறார். எனவே, அவர் நடிகராக நடிக்க எந்த தடையும் சொல்லப்போவது இல்லை. அதுவும் விஜய்க்கு வில்லன் என்றால் சொல்லவா வேண்டும். எனவே, இந்த படத்தில் செல்வராகவன் நடிக்க பேச்சி வார்த்தை நடைபெறுவது உண்மை என்றால் அவர் இந்த படத்திற்கு நிச்சயம் ஓகே சொல்வார் என்று தான் எதிர் பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement