மாவீரன் படம் தோல்வியடைந்து இருந்தால் இதைத்தான் செய்து இருப்பேன் – சிவகார்த்திகேயன் உருக்கம்.

0
2759
Maaveeran
- Advertisement -

மாவீரன் படம் தோல்வி அடைந்திருந்தால் இதை தான் செய்திருப்பேன் என்று சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை, அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-
Maaveeran

தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. படத்தில் கரையோரம் வாழ்ந்து வெளியாகி மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள்.

- Advertisement -

மாவீரன் படம்:

அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது. ஆனால், அரசு வழங்கிய அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் கதாநாயகன் சத்யா குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது. பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் அரசியலுடைய அதிகாரம் இருப்பதால் கதாநாயகனால் எதுவும் செய்யாமல் போகிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதாநாயகன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார்.

படத்தின் கதை:

அப்போது அவருக்கு பின்னால் ஒரு குரல் கேட்கிறது. அதுவரை என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்த கதாநாயகன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அந்த குரலினால் அவருடைய வாழ்க்கையே மாறுகிறது. அந்த குரல் யார்? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? அரசியலின் அதிகாரம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குனர் மடோன் உட்பட மாவீரன் படக்குழு பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறியிருந்தது, இந்தப் படத்திற்கு வெற்றி கொடுத்த அனைவருக்குமே நன்றி. நான் நிறைய வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தின் வெற்றி எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். காரணம் என்னுடைய நடிப்புக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. நான் மிமிக்ரி செய்து டிவியில் இருந்து வந்தவன்.

காமெடியை மட்டுமே நம்பி சினிமாக்குள் நுழைந்தேன். என்டர்டைனராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால், அது மட்டும் இருந்தால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து விடும். என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் சாரிலிருந்து அனைத்து இயக்குனர்களுக்கும் என் இடமிருந்து ஏதாவது ஒரு பெஸ்ட்டை கொண்டு வந்து இருக்கிறார்கள். இயக்குனர் மடோன் விருப்பப்பட்டால் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். அவருடைய திறமையை நம்பி மட்டுமே இந்த படத்தை எடுத்தோம். ஒருவேளை இந்த படம் தோல்வியை அடைந்திருந்தால் எனக்கு இந்த படத்தில் சம்பளம் வந்திருக்காது. அவ்வளவுதான் மற்றபடி என்னுடைய முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மாவீரனை ஏற்றுக்கொண்டு வெற்றி படமாக கொடுத்த மக்களுக்கு நன்றி. வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையில் வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement