அடிக்கற குளிருக்கு எதிர் நீச்சல் பட நடிகையின் போட்டோ ஷூட்டை பார்த்தீங்க அவ்வளவு தான்.

0
13632
Suza Kumar
- Advertisement -

தமிழ் சினிமாவில் அழகான நடிகைகள் சிலர் ஒரே ஒரு படத்தோடு காணாமல் போய் இருக்கிறார்கள், அந்த வகையில் நடிகை சூசா குமாரும் ஒருவர். கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து இருந்தார். அவரை தவிர இந்த படத்தில் அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சூசா குமார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் காதலியாக நடித்த இவர், ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அனைத்து ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டார். அதிலும் இவருக்காகவே இரவெல்லாம் செத்துப் போச்சு’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது. மேலும், பிரியா ஆனந்திற்கு பதிலாக இவரையே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக போட்டிருக்கலாம் என்றெல்லாம் கூட அப்போது பேசப்பட்டது.

இதையும் பாருங்க : திருப்பி போடபட்ட பாதுகாப்பு உடை. ரஜினி படத்தில் தீ ஸ்டண்டின் போது ஏற்பட்ட விபத்து – ஸ்டண்ட் அழகு.

- Advertisement -

எதிர்நீச்சல் படத்தை தொடர்ந்து இவர், சிறுத்தை சிவா இயக்கி ‘வீரம்’ மற்றும் மாகாபா நடித்த ‘மாணிக்’ போன்ற படத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. 26 வயதான இந்த இளம் நடிகை பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் சினிமா தொடர்புடைய படிப்புகளை படித்து முடித்த இவர், மாடலிங் துறையிடம் இருந்து வந்தார். அதன் பின்னரே இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது நீண்ட வருடங்களாக இவரைப் பற்றி எந்த செய்திகளும் வரவில்லை.

This image has an empty alt attribute; its file name is suza-kumar%2B%25283%2529.jpg

-விளம்பரம்-

படவாய்ப்புகள் இல்லை என்றாலும் அம்மணி போட்டோ ஷூட் நடத்துவதை மட்டும் எப்போதும் தவறுவதே இல்லை. அதே போல எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சூசா, அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் உடைகளில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்து சூடேற்றியுள்ளார்.

Advertisement