திருப்பி போடபட்ட பாதுகாப்பு உடை. ரஜினி படத்தில் தீ ஸ்டண்டின் போது ஏற்பட்ட விபத்து – ஸ்டண்ட் அழகு.

0
62457
azhagu
- Advertisement -

சினிமா உலகில் ஹீரோக்கள் எல்லோரும் பிரபலம் ஆவது அவர்களுடைய படங்களின் ஆக்ஷன் காட்சிகள் தான். அதற்கு பெரும் பங்கு வகிப்பவர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள். பெரும்பாலும் சினிமா உலகில் நடிகர்கள் எப்போதும் பேரும், புகழும் கிடைத்து உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். ஆபத்தான காட்சிகளில் அவர்களை காப்பாற்றி விடுபவர்கள் ஸ்டண்ட் கலைஞர்கள் தான். ஆனால், எப்போதுமே அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. சினிமா துறையில் ஸ்டன்ட் மாஸ்டர்கள் ஆக நடிப்பவர்கள் எல்லோரும் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் தாண்டி வந்தவர்கள். ஒரு சில பேருக்கு உயிர் போகுமளவிற்கு அடிபடும். ஒரு சில பேர் சண்டை காட்சிகளில் கொஞ்சம் கவனம் சிதறினாலும் போதும் மருத்துவமனையில் சேர வேண்டியது தான். அதுவும் ஒரு குறிப்பிட்ட வயது ஆகிவிட்டால் அவர்கள் சினிமா துறையிலேயே இருக்க மாட்டார்கள். எப்போதுமே அறுபது வருடங்களுக்கு மேல் ஆனாலும் சினிமாவில் ஹீரோக்கள் தான் இருப்பார்கள்.

-விளம்பரம்-
நடிகர் அழகு

- Advertisement -

வில்லன்கள், அடியார்கள், ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வயது கூடி விட்டால் போதும் அவர்களுக்கு பட வாய்ப்புகளை வராது. அவர்களை சினிமா துறையை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அப்படி இருந்த சவால்களை எல்லாம் தாண்டி சில ஸ்டண்ட் மாஸ்டர்கள் தான் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் சினிமா உலகில் குணச்சித்திர நடிகராகவும், ஸ்டண்ட் கலைஞராகவும் அறிமுகமானவர் நடிகர் அழகு. இவர் சிவாஜி, ரஜினி, கமல், மோகன்லால், அமிதாபச்சன் என சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிவர். தற்போது அவருக்கு எழுபது வயது ஆகிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து” என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதோடு இவரை மூத்த ஸ்டன்ட் கலைஞர் என்றும் சொல்லலாம்.

இதையும் பாருங்க : அவர்கள் அருகில் நின்றாலே நிர்வானமாக நிற்பது போல இருக்கும். துல்கர் சல்மானுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ?

படத்தில் என்ன தான் இவர் டெரர், வில்லன் என்று இருந்தாலும் உண்மையிலேயே வெள்ளந்தியான,வெகுளியான மனம் உடையவர். இவர் புதுக்கோட்டையில் குளத்துப்பட்டி என்ற ஒரு கிராமத்தில் பிறந்தவர். இவருடைய சின்ன வயதிலேயே அப்பா, அம்மா இறந்து விட்டார்கள். பின் இவர் தாத்தா வீட்டில் தான் வளர்ந்தார். 1969 ஆம் ஆண்டு வேலை தேடி சென்னைக்கு வந்தவர். எல்லாம் தாண்டி ஒரு வழியாக அவருக்கு வேலை கிடைத்தது. மேலும், இவர் தற்காப்பு கலையின் மீது உள்ள ஆர்வத்தினால் கராத்தே, களரி, சிலம்பம் போன்ற பல கலைகளை கற்றுக் கொண்டார். பின் ஒரு நிகழ்ச்சிகயில் தான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை திறமையை வெளிப்படுத்தினார். சண்டை இயக்குனர் மாதவன் இதை பார்த்து தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

-விளம்பரம்-
துணிவே துணை படத்தின் டைட்டில் கார்டில் அழகு பெயர்

1975 ஆம் ஆண்டு வெளியான “துணிவே துணை” என்ற படத்தில் ஜெயசங்கர் நடிக்கும் சண்டை காட்சியின் முதன் முதலாக நடித்தார். மேலும், இவர் தொடர்ந்து 15 வருடமாக சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டர் ஆக நடித்திருந்தார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒரியா, ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது ஒரு சில பேருக்கு அடிபட்டு இறந்து கூட உள்ளார்கள். அப்படி ரஜினி சாரோடு ‘ராணுவ வீரன்’ படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, ஃபயர் சீன்ல டூப் போட்டேன். இதனால் பாதுகாப்பு உடையோட தயாரா இருந்தேன். ஆக்‌ஷன் என்று சொன்னதும் நெருப்பு வைச்சாங்க. தீ பத்தலைனு பெட்ரோலை அதிகமா ஊத்தி எரிய விட்டுட்டாங்க. அந்த ஃபயர் ப்ரூஃப் உடை எப்படியும் 8 கிலோ இருக்கும். அதையும் தாண்டி தீ தலைக்கு மேலே எறிய ஆரம்பிச்சுடுச்சு. உள்ளுக்குள்ள புகை சூழ, மூச்சு விடமுடியலை. தீ அணைப்பு வண்டி தயாரா இருந்துச்சு. உடனே குப்புறப் படுத்து கை, கால்களை அசைச்சேன். தீயை அணைக்க முயற்சி செய்தாங்க. ஆனாலும், தீ கட்டுக்குள் வரலை. இதோட என் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்.  எனக்கு ஃபயர் ப்ரூப் உடையைப் போட்டு விட்டவர், உள்பக்கம் வரவேண்டியதை முன்பக்கம் வர்ர மாதிரி அணிவிச்சிருக்கார் என்று.

நடிகர் அழகு

கொஞ்சம் விட்டிருந்த செத்திருப்பேன். அடுத்தநாள் ஷூட்டிங் வந்த ரஜினி சார், விஷயத்தை தெரிஞ்சதும் என்னிடம் வந்து பேசினார்  என்ன அழகு நீங்க. ஃபயர் காட்சிகள்ல ஏன் நடிக்குறீங்க. உன்னை நம்பி குடும்பம் இருக்கு. இனி இந்த ரிஸ்கை எடுக்காதீங்க’னு சொன்னார். அந்த அளவிற்கு ரஜினி சார் என்மீது அக்கறை கொண்டு இருந்தார். எப்போதும் அவர் எனக்கு ஸ்பெஷல் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அழகு.

Advertisement