ஜெயலலிதா காரணம் இல்ல, சிவகார்த்திகேயன் தந்தை இறப்பிற்கு காரணமே இதான் – ஒரு கைதியின் வாக்குமூலம்.

0
1953
- Advertisement -

தன்னுடைய கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினாலும் போராடி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் படங்களில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் படம் டாக்டர். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. அதோடு இந்த படம் கோடிகளில் வசூலை குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் தந்தை தாஸ்:

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி உள்ளது.இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இது ஒரு பக்கமிருக்க, சிவகார்த்திகேயன் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தந்தை குறித்தும், போலீஸ் அதிகாரி தாஸ் குறித்தும் சிறைவாசி ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, Jail Superintendent தாஸ் ஒரு அற்புதமான, அன்பான மனிதர். இவர் சிவகார்த்திகேயன் தந்தை என்பது எனக்கு சமீபத்தில் தான் தெரியும்.

sivakarthikeyan

தாஸ் குறித்து சிறைவாசி அளித்த பேட்டி:

சிறையில் நான் இருக்கும் போது தாஸ் பற்றி பல விஷயங்கள் தெரியும். பொதுவாகவே Jail Superintendent என்றால் ஊழல், நியாயமில்லை என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் மத்தியிலும் ஒரு நியாயமான, நேர்மையான அதிகாரிகளும் இருக்கிறார்கள். அதை நானே பார்த்திருக்கிறேன். அதில் ஒருவர் தான் தாஸ். சிறைவாசிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் முன் நிற்பார். பொதுவாகவே சிறைவாசிகளுக்கு வரும் ரேஷன் பொருட்களில் பாதியை அங்கு வேலை செய்யும் போலீஸ் அதிகாரிகள் எடுத்துவிட்டு மீதியை தான் கொடுப்பார்கள். ஆனால், இவர் அந்த மாதிரி எதுவும் செய்ய மாட்டார்.

-விளம்பரம்-

தாஸின் நேர்மை குணம்:

குடிக்க தண்ணீர் வேண்டும் என்றால் கூட அவருடைய சொந்த காசில் வாங்கிக் குடிப்பார். உதாரணத்திற்கு 100 லிட்டர் பால் வருகிறது என்றால் 50 லிட்டர் பால் போலீஸ் அதிகாரிகள் எடுத்து வைத்துவிட்டு 50 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொடுப்பார்கள். ஆனால், இவர் இந்த மாதிரி செய்யும் அதிகாரிகளை கண்டுபிடித்து கேள்வி கேட்பார். இதனால் அவர் இருக்குமிடத்தில் சிறைவாசிகளுக்கு எல்லாப் பொருளுமே நியாயமாக கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருந்து நேராக கிளம்பி சிறைக்கு வரும் போது எங்கும் செல்லாமல் சிறைவாசிகள் இருக்கும் இடத்திற்கு சென்று சுற்றிப்பார்ப்பார். ஏதாவது பிரச்சனையா? கைதிகள் எப்படி இருக்கிறார்கள்? என்றெல்லாம் கவனிப்பார்.

வீரப்பன் வழக்கில் தாஸ்:

ஆனால், மற்ற அதிகாரிகள் எல்லாம் இந்த மாதிரி செய்ய மாட்டார்கள். வாரத்தில் இரண்டு முறை மட்டுமே அவர்கள் கைதிகளை பார்ப்பதே அரிது. அதிலும் பார்க்க சென்றால் பலத்த பாதுகாப்புடன் தான் வருவார்கள். ஆனால், தாஸ் மட்டும் தான் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தனியாக வந்து சிறைவாசிகளை கவனிப்பார். அந்த அளவிற்கு சிறைவாசிகளின் அவர் மீது அன்பும்,அக்கறையும் கொண்டவர். அதேபோல் சந்தன மரக்கடத்தல் வீரப்பன் கைது செய்தபோது திருச்சி சிறையில் தாஸ் உயரதிகாரியாக இருந்தார். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றம் ஏற்பட்டவுடன் கோபால் மற்றும் அவரது சகோதர சகோதரிகள் மீதும் கொலை மற்றும் கடத்தல் வழக்கில் போட்டதாக தலைமறைவாக இருந்தனர்.

தாஸ் கோயம்புத்தூர் சிறைக்கு மாற்றம்:

அந்த சமயத்தில் தாஸ் கோயம்புத்தூர் சிறைக்கு மாற்றம் செய்து இருந்தார். பொதுவாகவே இரண்டு வருடம் இருந்தால் வேறு ஒரு சிறைக்கு அதிகாரிகள் மாற்றுவது வழக்கம். ஆனால், வீரப்பனின் வழக்கினால் தான் தாஸ் மாற்றப்பட்டார் என்று பொய்யான வதந்திகள் வந்தது. அது உண்மை இல்லை. அவர் எப்போது போல பணி மாறியிருந்தார். பின் கோயம்புத்தூர் சிறையில் இவர் நேர்மையை கண்டு அங்கு இருக்கும் பிற அதிகாரிகள் கொடுத்த டார்ச்சலினால் மனநிம்மதி இல்லாமல் இருந்தார் தாஸ். பின் வேலை செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு காரணமாக தாஸ் உயிரிழந்தார். அங்க இருந்த அதிகாரிகளின் தொல்லை காரணமாக தான் மன உளைச்சல் ஆளாகி தாஸ் இருந்தார் என்று சிறைவாசி கூறி இருக்கிறார்.

Advertisement