ஹீரோவாவதற்கு முன்பாக ஜீவாவிற்கு டப்பிங் பேசியுள்ள சிவகார்த்திகேயன். இதான் அந்த வீடியோ.

0
1924
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். கடந்த 2019 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படம் குடும்ப கதை குறிப்பாக அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்திய படமாக இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படம் “ஹீரோ” படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் 35வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கூட வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : இளம் வயதில் இத்தனை நீச்சல் உடை காட்சியில் நடித்துள்ளாரா ரம்பா – வைரல் புகைப்படங்கள்.

- Advertisement -

ஆரம்ப காலத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது தனுஷ் தான். தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர், மெரினா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதே போல அஜித்தின் ஏகன் படத்தில் கூட அஜித்துடன் ஒரு காட்சியில் நடித்து இருந்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால், அந்த காட்சி படத்தில் வரவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாவதற்கு முன்பாக ஜீவா படத்தில் மிமிக்ரி செய்து உள்ளார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. சிவா மனசுல சக்தி படத்தில் வரும் அடங்காபிடாரி பாடலில் ரஜினியை போல ஜீவாவும், ரம்யா கிருஷ்ணனை போல அனுயாவும் வந்திருப்பார்கள்.அந்த காட்சிக்கு தான் நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியை போல பேசி டப் கொடுத்துள்ளாராம். இதோ அந்த வீடியோ.

-விளம்பரம்-
Advertisement