எவ்ளோங்க தொல்லை கொடுப்பீங்க. மீண்டும் டார்கெட் செய்யப்படும் சிவகார்த்திகேயன்.

0
106860
- Advertisement -

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகப் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன். அதுமட்டும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சினிமா துறையில் கடும் முயற்சிகளை செய்து வளர்ந்து வந்தவர். மேலும்,சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “நம்ப வீட்டு பிள்ளை” படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை தந்தது. மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே பயங்கர வரவேற்பு பெற்று வந்த படம். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வரவிருக்கும் படம் “ஹீரோ”. இந்த படம் தொடங்கியதிலிருந்தே பிரச்சனைகளில் சிக்கி வந்து கொண்டிருக்கின்றது. மேலும் விஷால், அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இரும்புத்திரை படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ். மித்ரன் அவர்கள் தான் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை இயக்குகிறார். பாலிவுட் நடிகர் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-
Image result for sivakarthikeyan angry"

- Advertisement -

மேலும்,கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் குழந்தைகளை கவரும் வகையில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டாக உருவாகியிருக்கும் படம். இந்த படம் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி திரையரங்கிற்கு வெளி உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் பயங்கர குஷி உற்சாகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் ஹீரோ படம் வெளியிடுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. சிவகார்த்திகேயன் ஹீரோ படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வந்தது. ஆனால், அந்த படத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘மால்டோ கித்தாப்பு’ என்னும் பாடல் வேற லெவல்ல ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இந்த படம் வெளியிடப்படும் என தயாரிப்பு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி இடைக்கால தடை விதித்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் பயங்கர சோகத்தில் உள்ளார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை தயாரித்த 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் மற்றொரு நிறுவனமும் இணைந்து இந்த ஹீரோ படத்தின் மீது தடை கேட்டு வழக்கு போட்டு உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. சில காலமாகவே சிவகார்த்திகேயன் மீது சில நடிகர்கள் பொறாமையில் இருந்தார்கள் என்ற தகவல்களும் இணையங்களில் வெளிப்படையாக வந்தது. இது குறித்து விசாரிக்கையில் சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ, வேலைக்காரன், சீமராஜா படங்களை தயாரித்தவர் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் ராஜா.

-விளம்பரம்-
Image result for sivakarthikeyan hero"

இந்நிலையில் டிஆர்எஸ் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடன் பெற்றதால் அவர்கள் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் ராஜாவிடம் கூறினார்கள். ஆனால், நிதிப் பிரச்சினை ஏற்பட்டதால் ஹீரோ படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு மாற்றி விட்டார் ராஜா. இதனால் தனக்கு தரவேண்டிய பணத்தை ராஜா தரும் வரை இப்படத்தை வெளியிடவோ, வேறு நிறுவனத்தின் மூலம் வெளியிடவோ தடை விதிக்க வேண்டும் என டிஆர்எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த பிறகு நீதிமன்றம் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்கையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் இதில் சம்பந்தப்படவில்லை. மேலும், 24 ஏஎம் புரடக்ஷன் தான் படம் தயாரித்தது என்ற தகவலும் தவறு. மேலும், எந்த நிறுவனத்திற்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்கள். மேலும், இது சம்பந்தமாக பல விசாரணைகள் நடந்து வருகின்றது. கூடிய விரைவில் இது குறித்த தகவலும் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்கள். இதனால் ரசிகர்கள் தான் மனவேதனையுடன் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Advertisement