மீண்டும் சிவகார்த்திகேயன் அப்பாவாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.
மேலும், கடைசியாக ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அயலான் படத்தில் இவர் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல பாலா நடித்திருக்கிறார்கள். ஏலியன் ஜனரில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதோடு பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
அமரன் படம்:
தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தினுடைய டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படை பற்றிய வசனங்களும், தீவிரவாதிகளுடன் சண்டை காட்சிகளும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
சிவா நடிக்கும் படங்கள்:
சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் கறி விருந்து அளித்திருந்தார். அந்த வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தின் உதவி இயக்குனர்கள் அனைவருக்குமே ஃபாசில் நிறுவன வாட்சை சிவகார்த்திகேயன் பரிசளித்திருக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படம் குறித்த தகவல்:
இந்த படம் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ருக்மணி வசந்த், மோகன்லால், வித்யூத் ஜம்வால் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதை முடித்துவிட்டு கமிட்டாகி இருக்கும் இன்னும் சில படங்களில் சிவா நடிக்க இருக்கிறார்.
Third Kutty SK incoming 👶❤️#Sivakarthikeyan and family recent video !!pic.twitter.com/PFpeFlE1Sr
— AmuthaBharathi (@CinemaWithAB) May 30, 2024
மீண்டும் அப்பாவுகும் சிவா:
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி, மகள் உடன் சேர்ந்து குடும்ப உறவினர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் ஆர்த்தியின் வயிறு பெரிதாக கர்ப்பமாக இருப்பது போல இருக்கிறது. இதனால் இன்னும் சில மாதங்களில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக குழந்தை பிறக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.