பொதுவாகவே திரையுலகில் ஒரு மொழியில் வெளி வரும் திரைப்படம் மெகா ஹிட்டாகினால், அந்த படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கி மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும். இது எல்லா மொழியிலும் நடந்து வருகிறது. அதுவும் வாங்கவிருக்கும் படம் அந்த மொழியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலோ அல்லது மிக வித்தியாசமான கதைக் களம் கொண்ட படமாக இருந்தாலோ, அதன் ரீமேக் ரைட்ஸை வாங்க பல நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போடுவார்கள்.

அப்படி பலத்த போட்டி இருக்கும் போது, அந்த ஒரிஜினல் படத்தின் ரீமேக் ரைட்ஸின் விலையும் கூடுதலாக சொல்லி விற்கப்படும். இந்த மாதிரி சம்பவங்கள் பல நம் திரையுலகில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு செய்தியும் அந்த வகையறா தான். தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.

இதையும் பாருங்க : நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்திய 17 வயது நடிகை. வைரலாகும் வீடியோ.

Advertisement

‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ என்று தன் ரசிகர்களால் பாசத்துடன் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் சங்கராந்தி பண்டிகைக்கு வெளி வந்த படம் தான் ‘அல வைகுந்தபுரமுலோ’. அந்த படத்தினை டோலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார். இதில் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல ஹீரோயின்ஸ் பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மெகா ஹிட்டானது. மேலும், பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. முன்னணி நடிகர் நடித்த படம், சூப்பர் ஹிட்டான படம், கோடிக் கணக்கில் வசூல் சாதனை என பாசிட்டிவ் விஷயங்கள் நிரம்பி கொண்டே போகும் இப்படி ஒரு படத்தை மற்ற மொழியில் ரீமேக் செய்யாமல் விடுவார்களா? கண்டிப்பாக ரீமேக் செய்யத் தான் போகிறார்கள்.

Advertisement

ஆம்.. இந்த படத்தினை தமிழ் திரையுலகில் ரீமேக் செய்யலாம் என்ற பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். கோலிவுட்டின் இரண்டு முன்னணி நடிகர்கள் இப்படத்தின் ரீமேக் வெர்ஷனில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த முன்னணி நடிகர்கள் இருவர் நம்ம சிவகார்த்திகேயனும், ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்புவும் தானாம்.

இதையும் பாருங்க : சந்திரமுகி 2 படத்தை அடுத்து தனது அடுத்த பட சம்பளத்தையும் கொரோனா நிதியாக கொடுத்த லாரன்ஸ். இம்முறை எவ்வளவு தெரியுமா ?

Advertisement

சிம்பு நடித்தால் அந்த படத்தினை ‘வாலு’ பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்குவாராம். சிவகார்த்திகேயன் நடித்தால் அந்த படத்தினை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ எனும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். ஆனால், சிவகார்த்திகேயன் நடித்தால், அதனை யார் இயக்கப்போகிறார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம் ‘லைகா’ நிறுவனம். இப்படி பலத்த போட்டி இருந்தால் கண்டிப்பாக ரீமேக் ரைட்ஸின் விலையை அதிகம் சொல்லாமல் இருப்பார்களா? அதன் விலை ரூ.5 கோடியாம்.

Advertisement