சந்திரமுகி 2 படத்தை அடுத்து தனது அடுத்த பட சம்பளத்தையும் கொரோனா நிதியாக கொடுத்த லாரன்ஸ். இம்முறை எவ்வளவு தெரியுமா ?

0
14673
lawrance
- Advertisement -

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல்வேறு உலக நாடுகள் பாதிப்படைந்துள்ளது. உலகளவில் இந்த நோயால் கடந்த சில மணி நேரத்திற்க்கு முன்பாக வரை 19,81,239 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை உலகளவில் இந்த நோயினால் 1,26,681 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோயினால் இந்தியாவில் 11,439 பேருக்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 377 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது.

-விளம்பரம்-

மக்கள் அனைவரும் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டிருந்த நிலையில் தற்போது இந்தியா முழுதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : என்னை பார்த்து யாரும் அப்படி சொல்லிவிடக் கூடாதுனு தான் நடிப்பது இல்லை – பல ஆண்டுகள் ரகசியத்தை உடைத்த மணிரத்னம்.

- Advertisement -

கொரோனாவினால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதியே பல்வேறு படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுளள்து .சினிமா ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் பாதிக்கப்பட்டுள்ள சினிமா நடிகர்களுக்கு உதவி கோரியிருந்தது.கொரோனாவால் வேலையிழந்த சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு நடிகர்களும் உதவி அளித்திருந்தார்கள்.

ஆனால், ராகவா லாரனஸ் தமிழ் திரையுலகில் அதிகம் நிதியுதவி அளித்து அசத்தினார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாக உள்ள சந்திரமுகி 2 படத்திற்கான முன் பணத்தை பெற்றுக் கொண்ட லாரன்ஸ் அதிலிருந்து மூன்று கோடி ரூபாயை கரோனா வைரஸ் நிவாரண நிதியாக வழங்கியதாக அறிவித்திருந்தார். மேலும், இந்த உதவிகள் தொடரும் என்றும் குறிப்பிட்டிருந்தார் லாரன்ஸ். தற்போது அதனை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : இவர் மீது தான் மிகப்பெரிய க்ரஷ். சிறு வயதிலேயே செய்த விஷயத்தை புகைப்படத்துடன் பகிர்ந்த வர்ஷா.

-விளம்பரம்-

நடிகர் லாரன்ஸ் சந்திரமுகி படத்தை தொடர்ந்து 5 ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். நேற்று , தமிழ் புத்தாண்டு முன்னிட்டு லாரன்சுக்கு 5 ஸ்டார் கதிரேசன் கால் செய்து வாழ்த்து தெரிவித்த போது, அண்ணா நாம் வீட்டிற்கு வாங்கி வரும் அத்தியாவசிய பொருட்களை 12 மணி நேரம் வெளியில் வைக்கும் சமயத்தில், நம் வீட்டுக் குப்பைகளை முகம் சுளிக்காமல் தினமும் எடுத்து செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு அடுத்து உதவி செய்ய விரும்புவதாக லாரன்ஸ் கூறியுள்ளாராம்.

Image

இதனால், தங்கள் எனக்கு கொடுக்கவிருக்கும் சம்பள தொகையில் 25 லட்ச ரூபாயை தூய்மை பணியாளர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக சென்றடைய வழி செய்யுமாறு கூறியதாக பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்திரமுகி படத்திற்காக வாங்கிய முன்பணத்தை கருணாநிதியாக கொடுத்த லாரன்ஸ் தற்போது தன்னுடைய அடுத்த படத்தின் சம்பளத் தொகை யில் இருந்து கருணா நிதியை அளித்துள்ளது பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

Advertisement