தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படம் குடும்ப கதை குறிப்பாக அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்திய படமாக இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த “ஹீரோ” படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இவர் நடிகராக அறிமுகமானது தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் தான். அதன் பின்னர் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்து உள்ளார். இவர் நடிப்பை தாண்டி படங்களை தயாரித்தும் வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வந்த முதல் படம் ‘கனா’. இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.
வாரிசு நடிகர்கள் மிகவும் எளிதாக சினிமாவில் நுழையும் காலகட்டமாகிவிட்ட நிலையில் எந்த வித சினிமா பின்பலமும் இல்லாமல் திரைத்துறையில் நடிகராக விளங்கி வரும் பல்வேறு திறமையான நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். 3 படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயன் நம்ம தல அஜித்தின் படத்திலும் முகம் காண்பித்துள்ளார். ஆம், அஜித் நடித்த ஏகன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த காட்சி திரைப்படத்தில் இடம்பெறவில்லை.
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்த பின்னர் சிவகார்த்திகேயன் ஒரு சில விளம்பரங்களில் நடித்துள்ளார் ஆனால் அதற்கு முன்பாகவே இவர் திரிஷா நடித்த ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்திருக்கிறார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த விளம்பரத்தின் வீடியோ இதோ..