சமீப காலமாகவே கோலிவுட்டில் கதை திருட்டு பிரச்சனை அதிகமாகிக் கொண்டே போகின்றது. முன்னணி இயக்குனர்கள் முதல் புதிதாக வரும் இயக்குனர்கள் வரை அனைவரும் இந்த கதை திருட்டு பிரச்சினை சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மாட்டிக் கொண்டவர் தான் ஹீரோ படம் இயக்குனர் பி.எஸ். மித்ரன். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் “ஹீரோ”. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இயக்குனர் அட்லி இடம் உதவியாளராக இருந்தவர் போஸ்கோ பிரபு. போஸ்கோ பிரபுவின் கதையைத் தான் இயக்குநர் மித்ரன் அவர்கள் திருடி ஹீரோ படத்தை எடுத்து விட்டார் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்து உள்ளார்.

ஹீரோ படம் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து வெளியாகும் வரை பல பிரச்சனைகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கி தான் வந்து கொண்டிருக்கின்றது. மேலும், இப்படம் வெளியானதை தொடர்ந்து ஹீரோ படம் கதை திருட்டு தான் என்று உண்மையானது. கதை திருடியது உண்மைதான் என்று இயக்குனரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவருமான கே. பாக்யராஜ் கூறியுள்ளார். மேலும், 18 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களிடம் ஹீரோ படம் குறித்து கதை திருட்டு தரப்பு வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. 18 பேர் கொண்ட குழு மித்ரன் எழுதிய கதையும், போஸ்க்கோ எழுதிய கதையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தியது. அதில் போஸ்கோவின் கதை தான் மித்ரன் திருடி ஹீரோ படத்தை எடுத்து உள்ளார் என்று ஆதாரத்துடன் இயக்குனர் பாக்கியராஜ் தலைமையில் அறிக்கை வெளியிட்டார்கள். ஆனாலும், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் அவர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை.

Advertisement

இதையும் பாருங்க : தனது படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட விஜய் அஜித் பட நடிகையை கமிட் செய்த அண்ணாச்சி.

மேலும், சட்டரீதியாக எதிர்கொள்ள போக்கிறேன் என்று எழுத்தாளர் சங்கத்தை எதிர்த்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதே போல் தான் சில ஆண்டுகளுக்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்க்கார் படம் பயங்கர சர்ச்சையை கிளப்பியது. முதலில் இந்த படம் கதை திருட்டு என்றும் கூறினார்கள். ஆனால், அதை முருகதாஸ் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பின் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் அட்லி இயக்கும் எல்லா படமும் திருட்டு கதை தான் என்றும் கூறி வருகிறார்கள். தற்போது சிவகார்த்திகேயன் படத்தின் கதை திருட்டு தமிழ் சினிமாவில் பயங்கர பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

இதேபோல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதை திருடும் புத்திசாலி இயக்குனர்கள் உருவாகி வருவதால் கோலிவுட் வட்டாரத்தில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் ஹீரோ படத்தை விட கார்த்திக்கின் தம்பி படம் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று உள்ளது என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது திரையரங்குகளில் ஹீரோ படத்தை தூக்கி விட்டு தம்பி படத்தை போட்டு உள்ளார்கள். இந்த கதை திருட்டில் இருந்து சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது 10 பேர் கொண்ட கதை ஆலோசகர்கள் குழுவை உருவாக்கி விட்டாராம். இவர்கள் கதையை ஓகே சொன்னால் தான் தான் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போகிறார் என்று கூறுகிறார்கள்.

Advertisement
Advertisement