தனது படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட விஜய் அஜித் பட நடிகையை கமிட் செய்த அண்ணாச்சி.

0
57505
Annachi
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் ஹீரோவாக நடித்ததை நாம் பார்த்துள்ளோம். ஆனால், நடித்தால் ஹீரோ தான் என்று தனது முதல் படத்திலேயே தானே தயாரிப்பாளராகும் கதாநாயகனாகவும் களமிறங்கி இருக்கிறார் நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி. நடிகர் நடிகைகள் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளதை நாம் பார்த்துளோம். ஆனால், தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக்கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-30.jpg

- Advertisement -

பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் தனது கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளார். பிரபல கடையின் குட்டி முதலாளி அருள். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாதா இடமே இல்லை.

இதையும் பாருங்க : இனி ஜீ தமிழ் சேனலை கேபிள் டிவியில் பார்க்க முடியாது. சோகத்தில் சீரியல் ரசிகர்கள். காரணம் இது தான்.

ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை பல கடைகளை வைத்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் நுழைய இருக்கிறார் என்று செய்தி தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக் . இவர் நடிக்க உள்ள படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி தான் இயக்குகின்றனர். இவர் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 30 கோடி என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Related image

இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில் இந்த படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற “கீத்திகா திவாரி” என்பவர்நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது படத்தில் கண்டிப்பாக முன்னணி நடிகைகள் யாராவது இருக்கும் வேண்டும் என்றும் நடிகை தமன்னாவை இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாட எப்படியோ சம்மதம் வாங்கி விட்டாராம் அண்ணாச்சி. மேலும், ஒரே ஒரு பாடலுக்காக தமனாவிற்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடிகை தமன்னா, அண்ணாச்சியுடன் ஏற்கனவே சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பது இங்கே நோட் செய்யப்பட வேண்டிய விஷயம்.

Advertisement