மனம் கொத்தி பறவை பட நடிகைக்கு திருமணம் முடிந்தது – இதோ புகைப்படம்.

0
1386
aathmiya
- Advertisement -

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி கொண்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன் 3 மற்றும் மெரீனா போன்ற படங்களின் மூலம் அறிமுகமானாலும் இவர், கதாநாயகனாக அறிமுகமானது ‘மனம் கொத்தி பறவை ‘ என்ற படத்தின் மூலம் தான். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆத்மியா. சொல்லப்போனால் சிவகார்த்திகேயனுடன் கதாநாயகியாக நடித்த நடிகைகளில் பட வாய்ப்புகளே இல்லாமல் போன நடிகை என்றால் அது இவர்தான் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-169.jpg

மனம் கொத்தி பறவை படத்திற்க்கு பிறகு தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவு ரீச் ஆகவில்லை. அதன் பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்பு வரவில்லை. இருப்பினும் இவருக்கு மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனாலும், வருடத்திற்கு ஒரு படம் என்று தான் அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

பின்னர் 2016 ஆம் ஆண்டு அமீபா என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். அதே போல நடிகர் விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்த ‘மார்கோனி மத்தாய்’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விஜய் சேதுபதிக்கு முதல் மலையாள மொழி படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் ஷ்யாம் நடித்த காவியன் என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் கண்டந் 2017 ஆம்ஆண்டே வெளியாகி இருந்த நிலையில் இன்னும் இந்த படம் திரைக்கு வந்ததா இல்லையா என்று கூட தெரிவில்லை.

இப்படி ஒரு நிலையில் நடிகை ஆத்மியாவிற்கு திருமணம் முடிவடைந்துள்ளது. கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இன்று (ஜனவரி 25 ) கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற்றது. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்று கூறப்படுகிறது. நாளை , ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஸ்டார் ஓட்டலில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. . திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா நடிக்க சனூப் சம்மதம் சொல்லியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் ஆத்மியா என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement