தன் மகனுக்கு தந்தை நினைவாக பெயர் வைத்துள்ள சிவகார்த்திகேயன் – அவரே பதிவிட்ட குயூட் புகைப்படம்.

0
12252
sk
- Advertisement -

தனது மகனுக்கு தனது தந்தை நினைவாக பெயர் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். மேலும், கனா படத்தில் இவர் பாடிய ‘வாயாடி பெத்தப் புள்ள’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில வாரங்களுக்கு இரண்டாம் குழந்தை பிறந்து இருந்தது.

- Advertisement -

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த சிவகார்த்திகேயன், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி, அம்மாவும் குழந்தையும் நலம் என்று தனது மகன் தனது கையை பிடித்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-88-702x1024.jpg

இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன். தனது மகனுக்கு அவரது தந்தை நினைவாக பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும்
“குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement