சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்த இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
படத்தில் வேலை செய்தவர்கள் மற்றும் படத்தைப் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்:

படத்தின் சில காட்சிகளில் நடிக்கும்பொழுது மிக சந்தோஷமா இருந்தது ஒரு சில காட்சிகள் நெஞ்சை பாரம் கொள்ள வைத்தது. இதையெல்லாம் கடந்துதான் நாம் வருகிறோமா என்று நினைக்கவைத்தது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் உண்மையான டாக்டர் ஒருவரே நடித்திருந்தார்.

Advertisement

அந்த சீன் எடுக்கும்போது எனக்கு கண்கள் கலங்கிருச்சு. அந்தக் காட்சி முடிந்த பின் பார்க்கையில் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் கண்கள் கலங்கி இருந்தாங்க.
இதுக்கு முன்னர் ஒரு சில விளம்பரங்கள்ல நடிப்பதை நான் தவிர்த்துவந்தேன். அதற்கு நான் அன்று பெருமைப்பட்டேன். இப்பொழுது இந்த மேடையை பயன்படுத்தி கூற விரும்புகிறேன். இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன். இதற்கு காரணம் இப்பொழுது கூற இயலாது. அதைச் சொல்லக் கூடாது என்பற்காக அல்ல.

இதைக் கூறினால் படத்தின் காட்சியையும் கதையையும் கூற வேண்டி இருக்கும். விளம்பரங்கள் வருவது அனைத்தும் தவறானவை என்று கூறவில்லை. அதன் மூலமா என்னைப் பார்த்து ஒரு குழந்தைக்கோ, அந்த குடும்பத்தில் ஒரு நபருக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது என எண்ணித்தான் இந்த முடிவை எடுத்தேன். இதற்கு முன் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இனி நடிக்க மாட்டேன். இப்படி என்னுள் இருக்கும் மனிதனை தட்டி எழுப்பிய படம் ‘வேலைக்காரன்’ என்றார்.

Advertisement
Advertisement