இமான் மற்றும் இமானின் முன்னாள் மனைவி குறித்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய இமானிடம் சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த இமான் ‘ மனம் கொத்தி பறவை படத்தில் தான் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை.இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும். அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் குறித்து பலர் சமூக வலைத்தளத்தில் பல சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் கூறி வந்தனர்.
இப்படி ஒரு நிலையில் இமான் மற்றும் இமானின் முன்னாள் மனைவி குறித்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள அவர் ‘ இமான் என்னை தம்பி தம்பின்னு தான் கூப்புடுவார். அண்ணனுக்கு பேசறனோ இல்லையோ அண்ணிக்கு போன் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டே இருப்பேன். ஏன் கொழுந்தனாரே இப்படி பண்றீங்கன்னு சொல்வாங்க. தொழிலை மீறின ஒரு உறவு’ என்று பேசி இருக்கிறார்.
ஏற்கனவே இமானின் குற்றச்சாட்டு குறித்து பேசிய இமானின் முன்னாள் மனைவி மோனிகா ‘சிவகார்த்திகேயன் ரொம்ப டீசன்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. நண்பர் என்ற அடிப்படையில் எங்கள் குடும்பத்தின் மேல் சிவகார்த்திகேயன் அக்கரையாக இருப்பார். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவில்லை. அது இமானுக்கு பிடிக்கவில்லை.
சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று தான் இமான் துரோகம் செய்தாரு என்று சொன்னது எனக்கு புரியுது. ஆனால், அதை வெளியில் வேற மாதிரி புரிஞ்சுகிறார்கள். பொதுவாக குடும்ப நண்பர்கள் இருந்தால் நண்பரோட குடும்பம் பிரியக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். இதில் சிவகார்த்திகேயன் மேலே என்ன தப்பு இருக்கு? என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.