90ஸ் குழந்தைகளின் பேவரைட் சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவர் இர்பான். இதனை தொடர்ந்து இர்பான் ‘சரவணன் மீனாட்சி ‘ தொடரில் சரவணனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிறகு இர்பான் அவர்கள் சீரியலை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்து விட்டார். இவர் பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற சில படங்களில் நடித்து வந்தார். இதில் எந்த படமும் அவருக்கு பெரியதாக அமையவில்லை. தற்போது சினிமாவில் பிரபலமான இயக்குனரும், நடிகருமான சேரன் இயக்கத்தில் வெளிவந்த படம் “ராஜாவுக்கு செக்”. சேரன் அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு இயக்கி நடித்து உள்ள படம் ராஜாவுக்குச் செக்.
இந்த படத்தில் சேரன் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் இர்பான் அவர்கள் வில்லனாக நடித்து உள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள இர்பான் விஜய் டிவியில் நடிகராக இருந்த போது சிவகார்த்திகேயன் தனது செய்த அட்வைஸ் குறித்தும் அவர் வாங்கிய சம்பளம் குறித்தும் கூறியுள்ளார். அந்த பேட்டியில் பேசியுள்ள அவர், அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது நான் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். ஒருமுறை ஒரு பேர்பார்மன்ஸ்சிற்காக கோயம்புத்தூர் சென்றிருந்தோம் அந்த நிகழ்ச்சியை ரம்யா தான் தொகுத்து வழங்கி இருந்தார்.
வீடியோவில் 11 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்
அப்போது நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் பலருக்கும் அறியப்பட்ட ஒரு நபராக இருந்தேன். அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமாக இருந்தார். எங்களுடைய நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு எனக்கு 5000 ரூபாய் சம்பளம் கிடைத்தது சிவகார்த்திகேயன் அண்ணாவிற்கு நான்காயிரம் ரூபாய் கிடைத்தது. அப்போது நான் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டு இருந்தேன். எப்போது நான் கோடிகளில் சம்பளம் வாங்குவேன் என்று. ஆனால், தற்போது சிவகார்த்திகேயன் அண்ணா கோடியில் சம்பளம் வாங்குகிறார் நான் இன்னமும் அந்த உயரத்தை அடைய வில்லை என்று கூறியுள்ளார் இர்பான்