தனக்கும் மகனுக்கும் மேட்சிங் வேஷ்டி சட்டை – தன் குடும்பத்துடன் சிவகார்த்திகேயன். பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்கள்.

0
395
sivakarthikeyan
- Advertisement -

பொங்கல் பண்டிகையை நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். மேலும், கனா படத்தில் இவர் பாடிய ‘வாயாடி பெத்தப் புள்ள’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில மாதங்களுக்கு இரண்டாம் குழந்தை பிறந்து இருந்தது.

- Advertisement -

சிவகார்த்திகேயனின் மகன் :

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த சிவகார்த்திகேயன், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி, அம்மாவும் குழந்தையும் நலம் என்று தனது மகன் தனது கையை பிடித்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

மகனுக்கு வைத்த பெயர் :

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், தனது மகனுக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்து இருந்தார். இதுகுறித்து புகைப்படத்தை பதிவிட்ட சிவகார்த்திகேயன். தனது மகனுக்கு அவரது தந்தை நினைவாக பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம் என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் பொங்கல் வாழ்த்து :

இந்த பதிவிற்கு பல லட்சம் லைக்ஸ்கள் குவிந்தது. இப்படி ஒரு நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் தன் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் தனது மகனுக்கும் மேட்சிங்காக சட்டையை அணிவித்து செம குயூட் போஸ் கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்கள் :

சிவகார்த்திகேயன் இறுதியாக நெல்சன் இயக்கத்தில் ‘டாக்டர்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து. இந்த படத்தை தொடர்ந்து டான், ஐயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் டான் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘ஜலபுல ஜங்’ பாடல் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement