நான் மத்தவங்கள மாதிரி நான் தான் வாழ்க்க கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன்- யாரை சொல்கிறார் சிவகார்திகேயன்

0
274
- Advertisement -

கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. கடைசியாக இவர் நடித்த கருடன் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் செய்து இருந்தது. தற்போது சூரி நடித்து இருக்கும் படம் கொட்டுக்காளி.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே கூழாங்கல் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார். இந்தப்படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடை பெற்று வருகிறது.

- Advertisement -

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவா:

இந்த நிலையில் கொட்டுக்காளி படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்று இருக்கிறது. இதில் படம் கொட்டுக்காளி படக்குழுவினர் உடன் சிறப்பு விருந்தினராக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் சிவகார்த்திகேயன், நான் அருணிடம், அவருடைய அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன். அவர் என்ன கதை வைத்திருந்தாலும் பரவாயில்லை நான் தயாரிக்கிறேன் என்று சொன்னேன். நான் கதைக்காக பண்ணுவதை தாண்டி இப்படி ஒருத்தரை, வினோத் ராஜ் என்பவரை செலப்ரேட் பண்ணுவதற்காக இந்த படத்தை பண்ணுகிறேன்.

வினோத் ராஜ் குறித்து சொன்னது:

இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதற்கான ஒரே காரணம் வினோத் ராஜ் தான். இது எவ்வளவு பட்ஜெட் என்று எதுவும் தெரியாது. அவர் என்னிடம் கதை சொன்னார். அதற்கு நான், எனக்கு முழு கதையும் தேவை இல்லை, தேவையில்லாத டிஸ்கஷன் வரும். பட்ஜெட் மட்டும் ஒர்க்கவுட் பண்ணி கொடுங்கள் என்றேன். இது ஒரு தொடக்கம் தான். இந்த படத்தில் என்ன இன்வெஸ்ட் பண்ணி இருக்கேனோ அது வெற்றி அடைந்து லாபம் வந்தால் அவருடைய அடுத்த படத்திற்கு அதை கொடுப்பேன். இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் ராஜ் மாதிரி இருக்கும் நபர்களை தேடி கண்டுபிடித்து இரண்டு பேருக்கு அட்வான்ஸ் கொடுப்பேன்.

-விளம்பரம்-

சினிமா குறித்து சொன்னது:

சினிமாவில் பணம் போட்டால் அதிலிருந்து சம்பாதிக்கணும். என்னை நடிகன் என்று ஸ்டார் ஆக்கி, என்னுடைய படத்தினுடைய வியாபாரத்தையும் பெரிதாக்கி வைத்திருக்கிறீர்கள். அதனால் என்னை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் இதை செய்கிறேன். பிரபலம் ஒருவர், நீங்கள் சினிமாவிற்காக சேவை செய்கிறீர்கள் என்று சொன்னார். அப்படி இந்த படம் நடந்தது என்றால் இந்த வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு என்னால் முடிந்த சின்ன கிரிடிட்டாக பார்க்கிறேன்.

விமர்சனம் குறித்து சொன்னது:

மேலும் நான் ப்ரொடக்ஷன் பண்றதால, யாரையும் கண்டுபிடிச்சு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன், நான் தான் உருவாக்கினேன் என்று சொல்ல மாட்டேன். என்னை அப்படிதான் சொல்லி சொல்லி பழகி விட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் கிடையாது. இது ஒரு சின்ன அறிமுகம். நீங்கள் கொடுத்த நடிகர் என்ற இடத்தில் இருந்து இதை நான் செய்கிறேன். கொட்டுக்காளி வெற்றியடைந்தால் இந்த மாதிரி முயற்சிகள் மீண்டும் தொடரும், நன்றி என்று கூறியிருக்கிறார்.

Advertisement