கலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டாம்.! சிவகார்த்திகேயன் பேச்சு.!

0
338

கலைஞர் அவர்கள் கலை மீதும்,தமிழ் மீதும் தீராத பற்று கொண்டவர். பல்வேறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள கலைஞர் அவர்களின் இழப்பு தமிழ் சினிமாவிற்கும் ஒரு ஈடு இணையில்லாத இழப்புதுதான். கலைஞரின் இழப்பிற்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

kalainjer

அனைத்து திரைப்பட கலைஞர்களும் கலைஞர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலைஞர் அவர்களின் மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தியதாக தெரிவித்துள்ளார். சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்த நடிகர் சிவகார்த்திகேயன் சென்றிருந்தார்.

கலைஞரின் உடலுக்கு மலர் வளையம் வைத்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில் ‘கலைஞர் அவர்களின் பெருமை குறித்து பேசுவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி எனக்கு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை என்று கலைஞரின் பெருமை குறித்து உருக்கமுடன் கூறியுள்ளார்.

thala-ajith

மேலும்,அவரது மறைவு குறித்து பேசிய சிவகார்த்திகேயன்’அவருக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதைவிட புகழஞ்சலி செலுத்துவது தான் சரியாக இருக்கும். அவர் சினிமாவில் பல தடைகளை உடைத்தெறிந்தவர் . அதனால் இன்று என்னை போல சில சாதாரணமான நடிகர்கள் கூட நிலைத்து நிற்க முடிகிறது. தமிழ், கலை இவை அனைத்தும் இருக்கும் வரை அவரது புகழும் இருக்கும். கலைஞர் ஐயா! அவர்களுக்கு என்னுடைய புகழஞ்சலி ‘ என்று கூறிவிட்டு புறப்பட்டுள்ளார்.