அடுத்த தளபதி குறித்த கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த அயலான் படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த படத்தை ஆர். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல பாலா நடித்திருந்தார்கள். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் நடித்து இருக்கிறார்.
அமரன் படம்:
இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும், முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
படம் குறித்த தகவல்:
இந்த படம் தீபாவளியை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சாய் பல்லவியின் கதாபாத்திரத்தின் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சாய்பல்லவி, இந்து ரெபாக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது.
ரசிகர்கள் கேள்வி:
அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமரன் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் சிவகார்த்திகேயனிடம், கோட் படத்தில் நடிகர் விஜய்யிடம் பேசிய வசனங்களை குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு சிவகார்த்திகேயன், கோட் படத்தில் நடித்ததற்கு ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதற்கு வெங்கட் பிரபு சாருக்கும், விஜய் சாருக்கும்தான் நன்றி தெரிவித்துக் கொள்ளனும் என்று கூறிக் கொண்டிருக்கும்போது அடுத்த தளபதி நீங்கள் தான் என்று ரசிகர்கள் கத்தி இருந்தார்கள்.
Ore Thalapathy Thaan… Ore Thala Thaan… Ore Ulaga Nayagan Thaan… Ore Super Star Thaan… – #Sivakarthikeyan About The #TheGOAT Scene pic.twitter.com/3K5FuB5PdX
— Trendswood (@Trendswoodcom) September 29, 2024
சிவகார்த்திகேயன் சொன்ன பதில்:
அதற்கு சிவகார்த்திகேயன், அதெல்லாம் கிடையவே கிடையாது. எப்போதுமே ஒரே தளபதி, ஒரே தல, ஒரே உலக நாயகன், ஒரே சூப்பர் ஸ்டார் தான். அடுத்த என்று வாய்ப்பே கிடையாது. நாமெல்லாம் அவர்களுடைய சினிமாவை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தேன். அந்த மாதிரி அவர்களுடைய படங்களை போல நல்ல படங்களை கொடுக்கணும். அவர்கள் இடத்திற்கே போகணும், அவர்களாகவே ஆக வேண்டும் என்பது சரி கிடையாது, அது தவறு என்று கூறியிருக்கிறார்.