என்னுடைய Biopicல இந்த தமிழ் நடிகர் தான் நடிப்பார் – ஏர்கர் மன்னன் நடராஜன் சொன்ன தகவல்.

0
341
natarajan
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் மிக பிரபலமான கிரிக்கெட் வீரராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடராஜன். இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் எளிய குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தவர். இந்திய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஆர்வத்தில் தான் இவர் தன்னுடைய பயிற்சியை தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் தன்னுடைய விடா முயற்சியினால் பிரபலமான கிரிக்கெட் வீரராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடராஜன். கிராமங்களில் இருந்து வரும் பல இளைஞர்களுக்கு இவர் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய அம்மா தள்ளு வண்டியில் சிக்கன் தொழில் நடத்தி தான் இவரை படிக்க வைத்தார். கடின உழைப்பும், போராட்டம் தான் இவரை இந்த இடத்தில் நிற்க வைத்து இருக்கிறது. தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

நடராஜன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து நடராஜன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, மாரத்தான் என்பது அனைவருக்குமே முக்கியமானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மாரத்தானில் ஓட வேண்டும். உடல் வலிமை, மன வலிமை அதிகரிக்கும். அனைத்து விளையாட்டுக்கும் ஓட்டம் என்பது அவசியமான ஒன்று. அதற்கு மாரத்தான் துணையாக இருக்கும். கிராமங்களில் இருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். என்னை போல பல இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும்.

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

அதுதான் என்னுடைய ஆசை. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடுவேன். மீண்டும் என்னுடைய திறமையை காண்பிப்பேன். இந்திய அணியில் பங்கேற்று விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக கட்டாயம் எடுக்கப்படும். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிப்பார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு இந்த படம் உருவாகலாம். இருந்தாலும் அதில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பார். அவர்தான் அந்த படத்தையும் தயாரிப்பார் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

சிவகார்த்திகேயன் நடித்த படங்கள்:

இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த பிரின்ஸ் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து இவர் அயலான், உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கும் படம், மாவீரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement