தங்கதுரையை தனது பழைய ஜோக் மூலம் தெறிக்கவிட்ட சிவகார்த்திகேயன். வீடியோ இதோ.

0
2880
- Advertisement -

விஜய் டிவியில் துவங்கபட்ட ‘கலக்கப்போவது யாரு’ முதல் சீசனிலேயே தங்கதுரை போட்டியாளராக இருந்தார். இவரை எல்லோரும் பழைய ஜோக் தங்கதுரை என்று தான் சொல்வார்கள். பழைய ஜோக் மூலமே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல படங்களில் காமெடியனாக நடித்து உள்ளார். இந்த நிலையில் இவர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கும் புது படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ்.

-விளம்பரம்-
Image result for plan panni pannanum audio launch

- Advertisement -

இவர் கார்த்திக் வேணு கோபால் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தில் பாலசரவணன், ரோபோ ஷங்கர், ராம்தாஸ் (முனிஷ்காந்த்), ஆடுகளம் நரேன், தங்கதுரை, விஜி சந்திரசேகர், ரேகா, லிவிங்க்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் பெயரை கூடிய விரைவில் அறிவிக்க உள்ளதாக படக்குழு கூறி உள்ளது.

-விளம்பரம்-

வீடியோவில் 5 :40 நிமிடத்தில் பார்க்கவும்

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் சிவகார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டார். அதில் சிவகார்த்திகேயன் அவர்கள் இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தங்கதுரை குறித்து கூறியது, நான் தங்கதுரை அவர்களின் மிகப்பெரிய ரசிகர். அவருடைய காமெடி எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். பலசாக இருந்தாலும் அதில் சின்ன சின்ன விஷயங்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கும். அதே போல் அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் அவர் சொல்லும் ஒரு காமெடி ரசிக்க வைத்தது. இந்த தருணத்தில் அவர் 300 வருடங்களுக்கு முன்னர் எழுதிய இந்த ஜோக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்று அவரை கலாய்த்த படி சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement