சூரி பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னீங்களே, Sk க்கு வாழ்த்து சொன்னீங்களா ? அவருக்கு இன்னிக்கி என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

0
943
soori
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான சூரி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதை வைத்துகொண்டே இது வரை பல படங்களில் இவரது காமெடியை ஹிட் அடிக்க வைத்துள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு திரையுலகில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், நடிகர் சூரிக்கு சினிமா துறையில் ஒரு நல்ல நண்பர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். சொல்லப்போனால் இவர்கள் இருவரும் எப்போதும் அண்ணன் தம்பி என்று பாசத்தை பொழிந்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் கிராமத்து சப்ஜெக்ட் படங்கள் என்றால் அதில் சூரி நிச்சயம் இடம் பிடித்துவிடுவார்.

இதையும் பாருங்க : ஷூட்டிங் போனா இத்தன மணி நேரம் நிக்கனும் – மீண்டும் விஜேவாக வருவது குறித்து அர்ச்சனா சொன்ன விளக்கம்.

- Advertisement -

இன்று சூரி பிறந்தநாளை கொண்டாடி வருவது போது சிவகார்த்திகேயன் வாழ்க்கையிலும் இன்று ஸ்பெஷல் நாள் தான். அது வேறு எதுவும் இல்லை, சூரி பிறந்தநாளான இன்று தான் சிவகார்த்திகேயனின் திருமண நாள் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. சூரியின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்திகேயன்.

அதில், எதிர் நீச்சல் அடி, வென்று ஏற்று கொடி , ஆள் செமையா இருக்கீங்க, இனிமேல் ஃபுல்லா ஹீரோ தான், நாங்க சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பார்க்கணும் போல, என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்று சிவகார்த்திகேயன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement