ஷூட்டிங் போனா இத்தன மணி நேரம் நிக்கனும் – மீண்டும் விஜேவாக வருவது குறித்து அர்ச்சனா சொன்ன விளக்கம்.

0
4593
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனாவும் ஒருவர். அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று பல்வேறு விமர்சனங்கள் கூட எழுந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-175.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா, பின்னர் விஜய் டிவியில் மீண்டும் தனது தொகுப்பாளினி பயணத்தை துவங்கினார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அர்ச்சனா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மண்டையோட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதையும் பாருங்க : கே டி ராகவன் உங்கள் அவானு பொங்காம இருக்கீங்களா – கருஞ்ச்சட்டை கேள்வியால் கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன்.

- Advertisement -

பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அர்ச்சனா, தன்னுடைய யூடுயூப் பக்கத்தில் மட்டும் வீடியோ வெளியிட்டு வருகிறார். தற்போது ஓய்வில் இருந்து வரும் அர்ச்சனா, சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர்கள் பலர், மீண்டும் எப்போது உங்களை தொகுப்பாளராக பார்க்கலாம் என்று கேட்டிருந்தனர்.

அதற்கு பதில் அளித்துள்ள அர்ச்சனா, நீங்கள் கேட்டுக்கொண்டால் இப்போதே நான் வரத் தயார். ஆனால், என்னுடைய வலது கால் தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கிருந்து தோல் மற்றும் தசைகளை வெட்டி எடுத்து அதை என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர். படப்பிடிப்புக்குச் சென்றால் அங்கு 15 அல்லது 16 மணி நேரம் நிற்க வேண்டியிருக்கும். என் கால்கள் இன்னும் பலவீனமாக இருப்பதால், மீண்டும் திரும்பி வர எனக்கு சில நாட்கள் ஆகும். செப்டம்பர் 3ஆம் தேதி எனக்கு ஒரு பரிசோதனை உள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 10 அன்று மீண்டும் வருவேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement