பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகிறார் சிவகார்த்திகேயன்

0
1111
sivakarthikeyan
- Advertisement -

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் ஒரு நிகழ்ச்சி இன்றைக்கு பிரபலம் என்றால் அது பிக் பாஸ் தான். கமல் இதை தொகுத்து வழங்கப்போகிறார் என்ற வார்த்தையை கேட்டதில் இருந்து இதன் சுவாரசியம் ஆரமிக்க துவங்கிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் தினம் தினம் நடந்துகொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் தமிழக இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு நாளை செல்ல போகிறார் என்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

 

வேலைக்காரன் படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதால். பிக் பாஸ் வழியாக அந்த படத்தை விளம்பரப்படுத்தும் யுக்தியை விஜய் டிவி கையாளப்போவதாக தெரிகிறது.

velaikaran

இதனால் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் பிக் பாஸ் வீட்டில் சிவகார்த்திகேயன் இருக்கப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement