நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் சேரனையும், சீமானையும் அவமதித்ததாக கூறப்பட்ட செய்தி குறித்து ரவிக்குமார் பதிவிட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்பவர் ரவிக்குமார். இன்று நேற்று நாளை என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இந்த முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவர் சிவகார்த்திகேயன் வைத்து அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
மேலும், ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் வலைப்பேச்சு சேனல் ரவிக்குமார் மீது குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்கள்.
வலைப்பேச்சு சேனல் பற்றிய தகவல்:
சோசியல் மீடியாவில் மிகப்பிரபலமான சேனல்களில் ஒன்று வலைப்பேச்சு. இந்த வலைப்பேச்சு யூடியூப் சேனல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கிறது. இந்த சேனலை லட்சக்கணக்கான நபர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த சேனலில் நடிகர்கள், படங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல விஷயங்களை பற்றி பேசி வருகிறார்கள். இதை பிஸ்மி, அந்தணன், சக்திவேல் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இயக்குனர் ரவிக்குமார் குறித்து பேசி இருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வீடியோவில் 11 நிமிடத்தில் பார்க்கவும்
வைரலாகும் வலைப்பேச்சு சேனல் வீடியோ:
அது என்னவென்றால், சமீபத்தில் நடந்த கூகுள் குட்டப்பா படத்தின் விழாவில் மூத்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், மற்றும் ஆர் வி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சேரனும், சீமானும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது வளர்ந்து வரும் இயக்குனரான ரவிக்குமார் சென்றிருந்தார். அவரை பார்த்த சீமான் அவர்கள் உங்களுடைய படத்தை பார்த்து இருக்கிறேன். நன்றாக இருந்தது என்று பாராட்டினார்கள்.
இயக்குனர் ரவிக்குமார் குறித்து எழுந்த விமர்சனம்:
ஆனால், ரவிக்குமார், சீமானிடம் அலட்சியமாக பதில் அளித்து பேசி இருக்கிறார். இதை பார்த்த எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. மிகப்பிரபலமான இயக்குனர்கள் மத்தியில் இப்படி வளர்ந்து வரும் இயக்குனர்கள் நடந்து கொள்வது சரி இல்லை என்று இயக்குனர் ரவிக்குமார் குறித்து விமர்சித்து மூவரும் பேசி இருந்தார்கள். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,
இயக்குனர் ரவிக்குமார் பதிவிட்ட டீவ்ட்:
நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியது இல்லை. அவருக்கு என்னை தெரியுமா? என்று கூட தெரியாது. ஆனால், அவர் என்னிடம் பேசும்போது நான் அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்து கொள்பவன் அல்ல. நடந்த சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று சொல்வது மிகப்பெரிய அவதூறு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இவரின் பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.