சிவகார்த்திகேயன் ஒருத்தருக்கான பரவாயில்ல. அது எப்படி எல்லாருக்கும் இப்படி இருக்கும் – எதிர்நீச்சல் பட கிளைமாக்ஸ்ல இந்த தவற கவனிசீங்களா ?

0
1562
sk

சினிமாவில் எத்தனையோ தவறுகளை நாம் கவனித்து இருக்கலாம். லாஜிக் மீறல்களையும் தாண்டி சினிமாவில் ஒரு காட்சிக்கு பின்னர் வரும் காட்சியில் வரும் தவறுகளை நாம் கவனிக்க மறந்திருப்போம். அவ்வளவு ஏன் ஒரு சில தவறுகளை படக்குழுவே கவனிக்காமல் அதனை எடிட் செய்ய மறந்துவிடுவார்கள். ஆனால், நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா ? அதுவும் இந்த குவாரன்டைன் காலத்தில் சினிமாவில் தோன்றிய பல தவறுகளை நோண்டி நொங்கெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மாரத்தான் ஆரம்பிக்கும் போது

அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர் நீச்சல்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வந்த தவறை மீம் கிரியேட்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு மாரத்தானில் பங்கேற்று இருப்பார். அது தான் இந்த படத்தின் ஒரு திருப்பு முனையாக இருக்கும். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் மாரத்தானில் சிவகார்த்திகேயன் தனது நெஞ்சில் நம்பர் ஒன்றை அணிந்து இருப்பார்.

மாரத்தான் முடியும் போது

அவர் மட்டுமல்ல அவருடன் மாரத்தானில் ஓடும் அனைவருமே நம்பர்களை அணிந்து இருப்பார்கள்.மாரத்தான் ஆரம்பிக்கும் போது அனைவரும் அணிந்திருக்கும் அந்த நம்பர் நீள நிறத்தில் இருக்கும். ஆனால், எல்லை கோட்டை நெருங்கும் போது அந்த நம்பர் சிகப்பு நிறத்தில் மாறி இருக்கும். சிவகார்த்திகேயன் மட்டுமல்ல மற்றவர்களின் நம்பர் குறை இறுதியில் சிகப்பு நிறத்தில் தான் இருக்கும்.

-விளம்பரம்-
Advertisement