10 படங்கள் கூடா தண்டாத சிவாகார்த்திகேயன் காட்டில் எப்போதும் அடைமழையாகவே உள்ளது. சமந்தா, நயன்தாரா என முன்னணி நடிகைகளுடன் நடித்து பறந்து கொண்டிருக்கிறார். வேலைக்காரன் படத்தை தொடர்ந்து தற்போது சீமாராஜ படத்தில் நடித்து வரும் சிவா, அடுத்தாக சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.
சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இந்த கதையில் சிவாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஸ்பைடர் படத்தின் தோல்விக்கு பிறகு ராசியில்லாதவர் என கருதப்பட்ட ராகுல் ப்ரீத் சிங், தீரன் பட வெற்றிக்கு பிறகு மீண்டும் தமிழில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
சிவாவின் இந்த சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ரகுல். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் மட்டும் கடந்த ஒரு வருடமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.