ஒரு நல்ல நடிகனாகப் பல வருடமாகப் போராடி வருகிறேன். ஆனா – எஸ்.ஜே.சூர்யா உருக்கம்.

0
742
SjSurya
- Advertisement -

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழாவில் தன்னுடைய திரை பயணம் குறித்து எஸ் ஜே சூர்யா உருக்கமாக பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றினார்.

-விளம்பரம்-

அப்படியே இவர் படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருக்கிறார். பின் இவர் அஜித்தின் வாலி, விஜய்யின் குஷி படங்கள் தான் இவருடைய வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது. அதற்கு பிறகு இவர் பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை வினோத் மார்க் தயாரித்திருக்கிறார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், விஷால், அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மார்க் ஆண்டனி படம்:

இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் டைம் டிராவல் கதையை மையமாக கொண்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது. மேலும், இந்த படத்தில் விஷாலை விட எஸ் ஜே சூர்யா நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் படத்தின் நாயகன் விஷால், எஸ் ஜே சூர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

படத்தின் வெற்றி விழா:

அப்போது விழாவில் எஸ் ஜே சூர்யா கூறியிருந்தது, படத்தின் வசூல், பாராட்டுகள், நல்ல விமர்சனங்கள் எல்லாம் தாண்டி இந்த படம் எல்லோரையும் கவலை மறந்து சிரிக்க வைத்திருப்பதை நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. விஷால் சாரிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாம் இருவரும் சேர்ந்து இனி இரண்டு இல்லை 20 படங்கள் கூட பண்ணலாம். ஆனால், நமக்குள் இருக்கும் இந்த அன்பான உறவு எப்போதுமே இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லும் சர்ச்சையான கருத்தால் நம்முடைய உறவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக் கூடாது. இதை நான் உங்களிடம் இந்த தருணத்தில் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

-விளம்பரம்-

திரைப்பயணம் குறித்து சொன்னது:

எனக்கு இவ்வளவு பெரிய ஸ்கிரீன் ஸ்பேஸ் தந்த உங்களின் பறந்த மனதை பார்க்கும்போது இவன் தாண்ட ஹீரோ என்று சொல்லத் தோன்றுகிறது. அதேபோல் ஒரு நல்ல நடிகனாக வேண்டுமென்று நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தபோதிலிருந்து பல வருடமாக போராடி இருக்கிறேன். ஆனால், கடவுள் மேலே போய் என்னை உட்கார வைத்துவிட்டு அப்படியே என் கண்ணை பிடுங்கி கீழே இறக்கி விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் இசை படம் பண்ணேன். என்னுடைய வாழ்க்கை மாற்றிய கார்த்தி சுப்புராஜ் சாருக்கு நன்றி. அதை தொடர்ந்து பெரிய இயக்குனர்களில் படங்களில் நடித்தேன். மாநாடு படம் வரை வந்தேன்.

உணர்வுபூர்வமாக எஸ் ஜே சூர்யா சொன்னது:

இப்போது மார்க் ஆண்டனி வரை வந்துள்ளேன். என்னை ரசித்த மக்களுக்கு மீண்டும் நன்றி. மீண்டும் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்காதா என்று நான் அடிக்கடி கடவுளிடம் கேட்பேன். இந்த மார்க் ஆண்டனி மூலம் எனக்கு நடந்துள்ளது. நான் விட்ட இடத்தில் 70% இடத்தை பிடித்து விட்டேன். ரசிகர்கள் எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். அதை தவறாக தவறவிடாமல் சரியாக பயன்படுத்தி இன்னும் கடுமையாக உழைத்து உங்களை மகிழ்ச்சியடைய செய்வேன். நீங்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேன். எனக்குள் இருந்து என்னை வழிநடத்தும் என் தாய்க்கும், தந்தைக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று உணர்வுபூர்வமாக பேசி இருந்தார்.

Advertisement