பிரியா பவானி சங்கர் பிறந்தநாளுக்கு எஸ் ஜே சூர்யா செய்துள்ள விஷயம். அப்போ அந்த கிசுகிசு உண்மையா ?

0
48895
Priya-bhavani
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றனர். அந்த வரிசையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியலில் நடித்த இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி கொண்டு வருகிறார். மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் போன்று பல படங்களில் நடித்து உள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து காற்றின் மொழி படத்தை இயக்கியவர் இயக்குனர் ராதா மோகன் அவர்கள் எஸ்.ஜே.சூர்யா வைத்து “பொம்மை” படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த பொம்மை படம் சைக்கோ மற்றும் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மேலும்,பிரியா பவானி சங்கர் தவிர மற்றொரு கதாநாயகியாக சாந்தினி இந்த படத்தில் மற்றொரு இந்த படம் காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இந்த படத்தை ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதையும் பாருங்க : தனது பழைய புகைப்படத்தை பதிவிட்ட குஷ்பூ. ஹன்சிகா முதல் கீர்த்தி சுரேஷ் செய்த கமண்ட்ஸ்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், இசை, தயாரிப்பு என பல முகங்களை கொண்டவர் எஸ்.ஜே சூரியா. அவருக்கு 49 வயதாகிறது. ஆனால், இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது ஆச்சரியம் தான். பார்ப்பதற்கு மிக இளைமையாகத் தான் தோற்றமளிக்கிறார். சமீப காலத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் நடிகை பிரியா பவானி சங்கர் இடம் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியதாகவும், அதற்கு ப்ரியா பவானி சங்கர் அவர்கள், உங்களை நான் அப்பா ஸ்தானத்தில் வைத்து உள்ளேன் என்றும் கூறியதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் இன்று நடிகை பிரியா பவானி சங்கரின்ன் பிறந்த நாள். மேலும், இந்த பொம்மை படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை பிரியா பவானி சங்கர் பிறந்தநாளன்று வெளியிட்டு பிரியா பவானி சங்கர் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதோடு இந்த பொம்மை படம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை ஏற்கனவே வெளியிட்டார்கள். ஆனால், படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும் இவ்வளவு நாட்களாக வெளியீடவில்லை. அதுவும் பிரியா பவானி சங்கர் பிறந்தநாளன்று வெளியிடலாம் என்று முடிவு செய்து உள்ளார் போல என்று பேசப்படுகிறது. இதன் மூலம் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி திருமண கிசுகிசு உண்மையாக இருக்குமோ? என்றும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டவர் அமிதாப் பச்சனின் சக நடிகரும், ரஜினியின் மருமகனும், தளபதியின் திரைத்துறை தம்பியும், சர்வதேச நடிகருமான அசுரன் தனுஷ் தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளார்” என்று கூறியுள்ளார். இன்று காலை 11 மணி அளவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு எஸ்.ஜே.சூர்யா தற்போது, ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘இரவாக்காலம்,’ நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய 2 படங்களும் திரைக்கு வர தயாராக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement