இந்த பாடலின் வீடியோ ஏன் ரிலீஸ் ஆகல – ஓராண்டிற்கு முன் கிரண் கேட்ட கேள்விக்கு Sj சூர்யா மூலம் கிடைத்த விடை.

0
6794
kiran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும் இயக்குனரும் ஆனவர் எஸ் ஜே சூர்யா. இவருடைய இயக்கத்திலும் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அந்த வகையில் எஸ் ஜே சூர்யா இயக்கி, நடித்த நியூ படம் 2004 ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் சிம்ரன், தேவயானி, கிரண் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் நடிகை கிரண் அவர்கள் சிவகாமி மாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நியூ படத்திலிருந்து வெளிவராத பாடலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நியூ படத்தில் இந்த பாடல் வெளி வரவில்லை. இந்த பாடலில் நான் அழகாக இருப்பேன். ஏன் வெளிவரவில்லை என்று கேட்டு இருந்தார். கிரண் இந்த பதிவை போட்டு ஓராண்டு ஆகிவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த பாடல் ஏன் வரவில்லை என்ற விளக்கத்தை கொடுத்துள்ளார் எஸ் ஜே சூர்யா. இப்படி ஒரு நிலையில் நியூ படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் பல ரசிகர்களும் இந்த படம் குறித்து ட்வீட் செய்தனர். அப்போது ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், நியூ படத்தில் இடம்பெற்ற ‘மார்கண்டேயா’ பாடலை யூடுயூபில் அப்லோட் செய்யுமாறு கேட்டிருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-74.jpg

இதற்கு பதில் அளித்த எஸ் ஜே சூர்யா, அந்த பாடல் படு ஹாட்டா இருக்கும் அதுனால அப்லோட் பண்ண முடியாது என்றார்.அது இல்லனாலும் பரவாயில்ல எஸ் ஜே சூர்யா போர்ஷனயாவது போடுங்க என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த எஸ் ஜே சூர்யா, அந்த எஸ் ஜே இப்போ ரொம்ப நல்ல பையன் ஆயிட்டான் என்று கூறியுள்ளார். இடையில் எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. நண்பன் படத்திற்கு பின் இவர் நடித்த மெர்சல், இறைவி, ஸ்பைடர் போன்ற படங்களில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிகவும் பாரட்டப்பட்டது. அதநால் எஸ் ஜே சூர்யா அதே டிராக்கில் சென்று கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement