நடிகர் எஸ்.ஜே.சூர்யா ட்ரோல்களுக்கு ரியாக்ட் செய்திருக்கும் வீடியோக்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நானி. இவர் தமிழில் ‘நான் ஈ’ மற்றும் ‘ஆஹா கல்யாணம்’ என்று சில படங்களில் தான் நடித்திருக்கிறார். இந்த படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இருந்தாலும், இவர் அதிகம் தெங்லுகு மொழி படங்களில்தான் நடித்திருக்கிறார். இவருக்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ என்ற பட்டம் இருக்கிறது அந்த அளவிற்கு நடிப்பில் அசத்துவார்.
மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் இவர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சரி போதா சரிவாராம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை டிவிவி தன்ய்யா தயாரித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நானியுடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, அதிதி பாலன், சாய்குமார், சுபலேகா சுதாகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் ப்ரோமோஷன்:
வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதால் படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் மற்றும் நானி மூவரும் தமிழில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் பாடல் ஒன்று பாட சொல்லி தொகுப்பாளர் கேட்டிருந்தார். அதற்கு, எஸ்.ஜே.சூர்யா, ஏற்கனவே இப்படித்தான் ‘ராயன்’ பட இன்டர்வியூவில் ஒரு பாடலை பாடி அது பயங்கரமாக வைரல் ஆகி, சிலர் என்னை ட்ரோல் செய்து இருந்தார்கள்.
உணர்ச்சிவசப்படுத்தி பாடவச்சுட்டாங்க:
பின், ட்ரோலயே மாட்டாம நல்ல பையனா சுத்திட்டு இருந்தேன். வாழ்க்கையிலே முதல் தடவை கேவலப்பட்டு, வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, உட்கார்ந்து இருக்கிற என்னை பாடு என்று தைரியமாக கேட்கிறீர்கள். கொஞ்சம் டயர்டாக அசந்து இருக்கும்போது ஒரு புள்ள நம்ம கிட்ட வந்து உணர்ச்சிவசப்படுத்தி பாடவச்சுடுச்சு. அதுக்கு அப்புறம் நான் பட்ட பாடு இருக்கே என்று கூறியிருந்தார். பின்பு நடிகர் நானி இடம் பாட்டுப்பாட சொல்லி கேட்டிருந்தார்கள்.
What if SJ Surya had sung and performed this song on spot😹
— NurA (@itisaarun) August 16, 2024
Just for fun sir @iam_SJSuryah ❤️ pic.twitter.com/uNdv390agJ
நானியை எச்சரித்தார் :
அதற்கு எஸ்.ஜே.சூர்யா, சார் உணர்ச்சிவசப்படாதீங்க, வடிவேலு காமெடி ஒன்று இருக்கிறது. அதில் , டிவேலு சார் கூட இருக்கறவன் கிட்ட, டேய் உனக்கு அறிவு இருந்தா வாடானு ஒருத்தன் வேன்ல வந்து கூப்பிடுவான். அப்புறம் வடிவேலு வேண்டாம் என்று சொல்லி, தைரியம் இருந்தா வாடா என்று அவனை கூட்டிட்டு போய்டுவாங்க. அப்புறம் அவங்க வேன்ல சுத்தி சுத்தி கிட்னியை எடுத்துட்டு அனுப்பிடுவானுங்க. அப்புறம் அவன் வந்து சார் முன்னாடியே சொல்ல கூடாதா அப்படின்னு கேட்பான்.
Thalaivan Mayiliragey song Template aanadhum Evlo Naasookka Solrapdi 😀😀😀 @iam_SJSuryahpic.twitter.com/LsCE4SO5ve
— Rajasekar Russalayan (@iamrajesh_pov) August 18, 2024
எஸ்.ஜே.சூர்யா குறித்து :
அந்த மாதிரி இவங்க எவ்வளவோ பாட சொல்லுவாங்க, வேண்டாம் சொன்னா கேளுங்க கிட்னி கொடுத்தவன் சொல்கிறேன் என்று நடிகர் நானியிடம் கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் எஸ் ஜே சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என்ன பன்முகங்களைக் கொண்டவர். நடிப்பு அரசன் மற்றும் நடிப்பு ராட்சசன் என்று அழைக்கப்படும் இவர் தற்போது பயங்கர பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.